பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 1} னார். அவ்வொலியைக் கேட்ட நம்மாழ்வார் கண்விழித்து நோக்கினரேயன்றி ஒன்றும் பேசவில்லை. அவருடன் பேசி யறிய எண்ணிய மதுரகவிகள் செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?' என்று வினவினார். அதற்குச் சடகோபர் அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’ என்று மறுமொழி பகர்ந்தார். உரையாடலின் தத்துவம் : செத்தி என்பது அசேதன மான உடம்பு. உடல் மூலப்பகுதியின் விகாரமாக உள்ளது; அறிவற்றது. அதனால் அதனைச் செத்த' என்றார். 'சிறியது என்பது உயிர்; ஆன்மா, அஃது அணுவடிவினதாக உள்ளது. அஃது உடம்பு முழுவதிலும் நடைபெறும் நிகழ்ச்சி களை அறிகின்றது; அதனால் அதனைச் சிறிது’ என்றார். 'பிறத்தல்' என்பது உயிர் தன் வினைகளுக்கேற்ப உடம்பை அடைதல்; எத்தைத் தின்று எங்கே கிடக்கும்' என்பது அவ்வாறு உடம்பைப் பெற்ற உயிர் எதனை நுகர்ந்து எங்கே இருக்கும்?' என்ற பொருளையுடையது. அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்பது, 'உடம்பை அடைந்த உயிர் தன் வினைப் பயனைப் புசித்துக் கொண்டு அவ்வுடம்பிலேயே இருக்கும்’ என்ற பொருளையுடையது. உயிர்அவ்வப்பிறப்பிற் குரிய வினை முடிந்து ஒயும் வரை அவ்வுடம்பிலிருக்கும் என்பது இதன் கருத்தாகும். இங்ங்ணம் ஆழ்வார் கூறிய விடையைக் கேட்ட மதுர கவிகள் மிக்க மகிழ்ச்சியடைந்து ஆழ்வாரையே ஆசாரியனாகக் கருதி அவர் திருவடிகளிலே தாளும் தடக்கையும் கூப்பி விழுந்து தண்டனிட்டு அவரது இணையடித் தாமரைகளைத் தியானித்தலும் திருநாமங்களை வழுத்துதலும் செய்து கொண்டு வாழ்ந்திருந்தார். இக்காலத்தில் ஆழ்வார் மதுர ź.