பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 சடகோபன் செந்தமிழ் கவிகளுக்கு தத்துவம், இதம், புருஷார்த்தம்’ ஆகியவற்றின் இயல்புகளையெல்லாம் விரிவாக விளக்கி மற்றும் அறிய வேண்டிய உண்மைகளையும் விரிவாக உபதேசித் தருளினார், ஆழ்வானின் பிரபந்தங்கள் : இங்ங்ணம் ஆழ்வார் உலகியலைச் சிறிதும் சிந்தியாமல் இறைவன் சிந்தனை யிலேயே ஆழங்கால் பட்டிருந்தார். இந்நிலையில் வைகுண்டநாதன் ஆழ்வாரது ஞானக்கண்ணுக்கு இலக்காகிச் சேவை சாதிக்கத் திருவுள்ளங் கொண்டு பெரிய திருவடியின் மீது பிராட்டிமார்களுடன் எழுந்தருளிக் காட்சி நல்கு கின்றான். ஆழ்வாரும் அம்முகில் வண்ணனது திருமேனி பழகினைச் சேவித்துக் கண்கள் ஆனந்த அருவி சொரிய, மெய் மயிர் சிலிர்ப் விதிர்விதிர்ப்பெய்தி ஆனந்த வெள்ளத் தில் ஆழ்ந்தார்; அதன் பிறகு நூற்றெட்டுத் திருப்பதி எம்பெருமான்களும் அங்கு எழு ந் த ரு E க் காட்சி கொடுத்தனர். ஆழ்வார் அவர்களைச் சேவித்தார்; அவர் களது திவ்விய திருக்குணங்களை அநுபவித்து அவ்வநுபவத் தாலுண்டான அன்பு உள்ளடங்காமல் அதனைப் பிரபந்த முகமாக வெளியிட்டருளினார். இங்ங்ணம் பாடியருளின பிரபந்தங்கள் கான்கு அவை 1. திருவிருத்தம்: 2. திருவாசிரியம், 3. பெரிய திருவந்தாதி, 4. திருவாய் மொழி ஆகியவை. இவை முறையே இருக்கு, வேதசாரம், யஜுர் வேதசாரம் அதர்வன வேதசாரம், சாம வேதசாரம் என்று அமைந்துள்ளன என்பது ஆன்றோர் - האידאאז%-ליk 1. தத்துவம் : மூன்று; அவை சித்து, அசித்து, ஈசுவரன் இதம் வீடுபேற்றிற்குச் ::::: பெறும் பத்தி, பிரபத்தி (சரணாகதி) என்பன. புருஷார்த்தம் : புருஷன் - ஆன்மா, அர்த்தம் - பொருள்.அதாவது ஆன்மா அடைய வேண்டிய பொருள்; வீடுபேறு, ! ."