பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 13 கொள்கை. இறையதுபவத்திற்குத் தடையாயிருக்கும் இந்த உடல் தொடர்பை அறுத்துத் தள்ள வேண்டும் என்று விரும்பினார் திருவிருத்தத்தில்; சம்சார சம்பந்தம் அற்று ஒரு தேச விசேடத்தில் போனால் அதுபவிக்கக் கூடிய தன்னுடைய மேன்மையையும் நீர்மையையும் வடிவழகையும் இங்கே இருக்கும் காலத்திலேயே அநுபவிக்கலாம்படி தெளிந்த நிலையைச் செய்து கொடுக்க, பிறப்பு:அற ஏழு திருப்பாசுரங் களால் அவ்வகை அதுபவித்தார் திருவாசிரியத்தில், இப்படி அநுபவித்த பொருளில் பொருளுக்குத் தகுதியான ஆசை கரை புரண்டோடும் படியை அருளிச் செய்தார் பெரிய திருவந்தாதியில்; ஆமத்தை (பசியின்மை) அறுத்துப் பசியை மிகுவித்துச் சோறிடுவாரைப் போன்று, தமக்கு ருசியைப் பிறப்பித்தபடியையும் அந்த ருசிதான் பரபக்தி, பரஞானம், பரமபக்திகளாய் மலர்ந்து பக்குவமானபடியையும், பின்னர் உடல் தொடர்பும் அற்றுப் பேற்றோடே தலைக்கட்டின படியையும் அருளிச் செய்கின்றார் திருவாய்மொழியில்' இந்த நான்கு பிரபந்தங்களும் நான்மறைகளுட்ன் ஒப்பிட்டுக் காட்டியது எண் (நான்கு என்ற எண்) ஒற்றுமை யினாலேயன்றி பொருள் ஒற்றுமையினாலன்று என்பது அறியத்தக்கது. - அருள்கொண்டாடும் அடியவர் இன்புற அருளி னான் அவ் அருமறையின் பொருள்' 12. பதிபக்தி : இறைவனைக் காணும்போது இன்பமும் கானாதொழியும்போது துன்பமும் அடைதல், பரஞானம் : இறைவனைத் தெளிவாக நேரே. அறிதல், பரமபக்தி : இறைவனுடைய பிரிவில் சத்துக்கேடு உண்டாதல்; அதாவது தான் உள்ளாத் தன்மையின்றியே ஒழிதல். - - 13. ஈட்டின் தமிழாக்கம்-ஈடு திருமகள் கேள்வன-மூன்று (பக். 55-56) 14. கண்ணிநுண்.3