பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் - 15 செல்லும் அடியார்கள் முடிமீது அவர் திருவடியாக வைக்கப் பெறுவதைச் சடகோபன், சடாரி என்று வழங்கி வருவதைச் காணலாம்! சடகோபன் சடாரி' என்பன நம்மாழ்வாரின் திருப்பெயர்களாகும். சடகோபரை அடைந்தவுடன், அவரிடத்துப் பேரன்பு கொண்டு அவரை ஆச்ரயித்த மதுரகவிகள் அவரையே தெய்வமாக எண்ணி அவர்மீது பத்துப் பாசுரங்களைக் கொண்ட கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தம் பாடியுள்ளார். இ நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் முதலாயிரத்தில் இறுதிப் பிரபந்தமாக இடம் பெற்றுள்ளது. இந்நூல் எட்டெழுத்து மத்திரமாகிய பெரிய திருமந்திரத்தில் மிக முக்கியமான நம என்ற நடுப்பதத்தின் பொருளை விளக்குவதாகக் கொள்வர் வைணவப் பெருமக்கள் மதுரகவி கள் இவ்வுலகில் இருந்த அளவும் நம்மாழ்வாருக்குத் திருக் கோயில் அமைத்து வழிபாடெல்லாம் செய்து வரலானார். நம்மாழ்வார் அவதரித்த காரணத்தால் திருக்குருகூர்’ என்ற அப்பெயர் மாறி ஆழ்வார் திருநகரி என்ற பெயரால் வழங்கி வருகின்றது. திருக்குருகூர்’ என்ற திருப்பெயர் நூல் வழக்கில் மட்டுமே உள்ளது. உண்டே வைகாசி விசாகத்துக் கொப்பொருகாள்? உண்டோ சடகோயர்க் கொப்பொருவர்?-உண்டோ திருவாய் மொழிக்கொப்பு? தென்குருகைக் குண்டோ ஒருபார் தனிலொக்கும் ஊர்' -மணவாள மாமுனிகள் 18 உபதேச ரத்ன-15