பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சடகோபன் செந்தமிழ் பாசுரங்களில் இடம் பெற் று ள் ளன . ஏனையவை திருவேங்கடம் முதலிய வடநாட்டுத் திருப்பதிகள். மலை நாட்டுத் திருப்பதிகளில் சில இவரால் மட்டிலுமே பாடப் பெற்றவை. திருவேங்கடத்தை மிகுதியாகப் பல இடங்களில் பாராட்டியுள்ளார். திருவிருத்தத்தை ஆழ்வாருடைய முதற் பிரபந்தமாக கருதுவர் அறிஞர்கள். பாற்கடலும் பரமபதமும் நீங்கலாக இந்த லீலாவிபூதியில் உள்ள திருப்பதிகளில் திருவேங்கடத்தையே திருவிருத்தத்தில் முதலில் எடுத்துக் காட்டியுள்ளார். இவற்றை இந்த இயலிலும் வரும் இயல் களிலும் கண்டு மகிழ்வோம். முதலில் சோழ நாட்டுத் திருப்பதிகளில் முக்கியமான கோவிலிலிருந்து" (திருவரங்கம்) தொடங்குவோம். இத் 3. திருவரங்கம் (கோயில்) : திருச்சி - விழுப்புரம் இருப்பூர்தி வழியில் திருவரங்கம் என்ற நிலையத்தி விருந்து கல் தொலைவிலுள்ளது. நிலையத்தி விருந்து எல்லாவித வாகன வசதிகளும் கிடைக்கும். கோயில் பெரிய நகரமாதலின் சத்திரங்கள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், இராமாதுச கூடங்கள் முதலியன இங்கு உள்ளன. திருச்சியிலிருந்து நகரப் பேருந்துகள் அடிக்கடி வந்து கொண்டிருப்ப்தால் திருச்சியில் வசதியாகத் தங்கிக் கொண்டு இங்கு வரலாம். இங்குள்ள எம்பெருமான் திருமேனி ஸ்வயமாகவே ஆவிர்க்கப் பெற்றுப் பிறகு தேவர் இதிலியோரால் பூசிக்கப் பெற்றது. நம் நாட்டில் இவ்வகை எட்டு உள்ளன. இவை திருவரங்கம், திருவேங்கடம்,புரீமுஷ்ணம், வான்மாமலை,புஷ்கரம், நைமிசாரண்யம், பதரிகாசிரமம், சாளக்கிராமம் என்ற இடங்களில் உள்ளவை. பூர் முஷ்ணம், புஷ்கரம் (ஆந்திரம்) இவை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெறவில்லை. பூலோக வைகுந்தம்’ என்று போற்றிப் புகழப்பெறும் இத்தலம் ஆழ்வார்களின் 245 பாசுரங்கள் பெற்றது. திருக்கோயில் ஏழு சுற்று களையுடையது; 21 கோபுரங்களைக் கொண்டது" மொட்டைக் கோபுரமாக இருந்த இராயர் கோபுரம் அண்மையில் எழுப்பப் பெற்றது .