பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சடகோபன் செந்தமிழ் இதில் ஆழ்வார் நாயகி கூறுவது: "உன்னோடு நேரில் சம்பந்தம் பெற்ற திருத்துழாயானது பிரிவுக் காலத்தில் புணர்ச்சிக் காலத்தை நினைவூட்டி மிகவும் வருத்தப்படுத்தி உடலிளைக்கச் செய்வதும் அதற்கு ஆற்றாது நாம் மெலிந்து வளை இழப்பதும் யுக்தமாயிருக்கலாம். அது வ ன் றி 'வாயுவானவன் எம்பெருமானிடத்து அஞ்சிக் கொண்டு {அவனது கட்டளைக்கு உட்படிந்து) வீசுகின்றான்' என்ற உபநிடத வாக்கியத்தின்படியே இயல்பாக உனக்கு அஞ்சி நடக்கும் தன்மையதான காற்று உனது சம்பந்தம் பெற்ற நம்மைச் சமயம் பார்த்து வருத்திக் கொள்ளை கொள்ளத் தொடங்குவது தகுதியோ? என்னை நலியக் காற்றுக்கு என்ன உரிமை உண்டு? அங்ஙனம் ஆகாதபடி என்னைக் காத்தருள வேண்டும்; உன்பக்கல் அன்பு வைத்தவர்களில் எம்மைப் போல வருந்தியவரும் உன்னால் ஆதரவுாைட்டப்பட்டவரும் இதுவரையில் எங்கும் எவரும் இல்லையே’ என்கின்றாள். "திருத்துழாயானது என்னை எவ்வளவு வேண்டுமானாலும் துன்பப் படுத்தட்டும்; அதற்கு நான் உடன்பட்டிருக்கக் கடமைப் பட்டிருக்கின்றேன்' என்றது. இதில் நோக்குடைய தல்ல; காற்று என்னைத் துன்பப் படுத்துவது ஒருபடியிலும் யுக்தமன்து’ என்று வற்புறுத்திக் கூறுவதில் நோக்குடைத்து. "ஒருபுறத்தில் திருத்துழாய் நலியவும் மற்றொரு புறத்தில் வாடை வந்து வீசி நவியவும் இப்படி இரண்டு துன்பங்களுக்கு ஈடு கொடுக்க் என்னாலாகவில்லையே; இந்தத் துன்பங் களுக்கு வாய்ப்பின்றியே எனக்குப் புணர்ச்சியைத் தந்தருளாய்” என்கின்றாள். - 'வள்வாயலகால் புள் நந்துழாமே பொ ரு நீ ர் த் திருவரங்கா! என்ற விளியால் . "உனது நாட் டு க்கு உறுப்பான தண்ணிரும் தன்னை யடைந்த பொருளை எதிராக வராதபடி திரைக்கையாற் பொருது காத்திடுகின்றதே; உனக்குமாத்திரம் ஆஃது இயல்பாகாதோ? அடுத்தாரைக்