பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருப்பதிகள் 25 காக்கும் தன்மை அசேதநத்துக்கே இருக்கும்போது பரம சேதநனான உனக்கு அது மிகவும் இருக்க வேண்டாவோ?’’ எனக் குறிப்பிடும் நுட்பம் எண்ணி மகிழ்த்தக்கது. இயற்கை யாயினும், தன்னிடத்திலுள்ள நத்தைகளைப் பறவைகள் கூர்மையான வாயலகால் கொத்தாமைக்காக அலைமோதுவ தாக வருணித்தது சமத்காரம், உழுதல் - சோத்தித் தின்னுதல். இக்குறிப்பிட்ட கருத்தை உள்ளத்தில் அமைத்துக் கொண்டு பாசுரத்தை மீண்டும் மீண்டும் படித்து சுவையின் கொடுமுடியை எட்ட முயலலாம். தமது முதல் பிரபந்த மாகிய திருவிருத்தத்தில் முதல் திவ்விய தேசமாகிய கோவிலை (திருவரங்கம்) மங்களாசாசனம் செய்யப் பெற்றிருப்பதைக்கண்டு மகிழலாம். (1) இந்தத் திவ்விய தேசத்தின்மீது மங்களா சாசனம் செய்தது. கங்குலும் பகலும் (7, 2) என்ற முதற்குறிப்புடைய திருவாய்மொழியாகும். இது தாய்பாசுரமாக நடை பெறுகின்றது. இத்திருப்பதிகத்தில், என்திரு மகள்சேர் மார்வன்ே' என்னும்; ‘என்னுடை யாவியே என்னும்: "கின் திரு எயிற்றால் இடங்து கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும்; 'அன்றுரு வேழும் தழுவிகீ கொண்ட ஆய்மகள் அன்பனே!” என்னும்; தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே! தெளிகிலேன் முடிவிவள் தனக்கே (9) (என்திருமகள் - எனக்குப் புருஷகார பூதையான் பெரிய பிராட்டி, ஆவி உயிர்; எயிறு - கோரப்பல்; நில மகள் . பூமிப் பிராட்டி, கேள்வன் - நாயகன்; ஆய் மகள் - நப்பின்னை: முடிவு - ஆர்த்தி முடிவு|