பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சடகோபன் செந்தமிழ் என்பது ஒன்பதாவது பாசுரம். இத் திருவாய்மொழியில், 'திருத்தாயார் இப்பராங்குச நாயகியைப் பெரிய பெருமாள் திருவடிகளிலே இட்டுவைத்துக் கொண்டிருந்து இவள் அழுவது தொழுவது மோகிப்பது பிரலாபிப்பது அடைவு கெடப் பேசுவது நெடுமூச் செறிவது அதுவும் மாட்டா தொழிவது தன்னை மறந்திருப்பது முதலியவற்றை ஒவ் வொன்றாக எடுத்துச் சொல்லி இவள் திறத்திலே நீர் என் செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கின்றீர்?’ என்று கேட்கின்ற படியாய்ச் செல்லுகின்றது. இத்திருவாய் மொழி. நம்பிள்ளை யீடு: "இத்திருத்தாயாரும் எல்லாப் பாரங்களை பும் அவன் தலையிலே போகட்டுப் பெண்பிள்ளையைத் திருமணத்துணுக்குள்ளே போகட்டுப் பற்றிலார் பற்ற நிற்றல் முதலாகிய அவனுடைய குணங்களை விண்ணப்பம் செய்யா நின்றுகொண்டு ஒரு கால நியதியாதல், ஒருதேச நியதியாதல், அதிகாரி நியதியாதல் இன்றிக்கே எல்லாரும் சென்று பற்றலாம்படி இருக்கிறபடியை அதுசந்தித்து (நினைத்து) தன் பெண்பிள்ளையினுடைய நிலையைத் திருவுள்ளத்திலே ப டு த் து கி ன் ற | ள் இத்திருவாய் மொழியாலே" என்பது. இந்தப் பாசுரத்தில், பெரிய பிராட்டியாரைப் புருஷகார மாகக் கொண்டவர்களுக்குப் பலனில் விசனம் இல்லாமை யாலே 'அந்தோ! நான் பெரிய பிராட்டியாரைப் புருஷகார மாகப் பற்றியிருக்க, என் கதி இங்ங்னே யாவதே!’’ என் கின்றாள் திருத்தாயார். இங்கு என்’ என்பது திருமகளுக்கு அடை மொழி என்பது தெளிவு: மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது. 'அனந்தாழ்வான் தன் பெண்பிள்ளையை 'என்திருமகள்' என்று திருநாமம் சாத்தினான் என்பது ஈடு. "என் திருமகள் சேர்மார்பனே யென்னும்' என்று ஒரு வாக்கியமாகவும், "என்னுடையாவியே யென்னும்’ என்று