பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருப்பதிகள் 27 ம ற் .ெ றா ரு வா க் கி ய மா. க வு ம் பிரித்துப் பொருள் கொள்ளலாம். அன்றி, முதலடி முழுவதையும் என்திருமகள் ஆவியே என்னும் என்று ஒரே வாக்கியமாகப் பொருள் கொள்வதும் உண்டு. இங்கே ஈட்டில் ஆச்சரியமானதோர் ஐதிகம் காணலாம். பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யுமவை கேட்கைக்காக கஞ்சீயனை அழைத்தருளித் தாம் அது செய்யா நிற்கச் செய்தே இத் திருவாய்மொழி இயலைக் கேட்டருளா நிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே, "என் திருமகள் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும்' என்று இயலைச் சேர்த்தருளிச் செய்ய அதைக் கேட்டுக் கையுதறி "பூரீரங்களாத என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர். அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு இவர்க்குப் பகவானை அடைவது அணித்தாகிறதோ? என்று அஞ்சியிருந்தேன்' என்று சீயர் (நஞ்சீயர்) அருளிச் செய்வர். இதனை மேலும் விளக்குவேன். பட்டர் ரீரங்கேச புரோகிதர். இவர் அடிக்கடி எம் பெருமான் சந்நிதியில் உபன்யாசங்கள் செய்யநேரும், அதற்காக முன்னதாகவே நஞ்சீயரை அழைத்து" அருளிச் செயல்பாசுரங்களைச் சொல்ல விட்டுச் செவிக்கினியதாகக் கேட்பது வழக்கம். அமுது செய்து கொண்டே ஒரு நாள் கேட்டருள்கின்றார். அப்போது இயல் சேவிக்கின்ற நஞ்சீயர் இப்பாசுரத்தைச் சேவிக்கும் போது 'என் திருமகள் சேர்மார்பனே என்னும்' என்கின்ற இடத்தில் நிறுத்தாமல் ஒரே மூச்சில் முதலடியை முழுதும் சொல்லி நிறுத்தினாராம். ‘என்னும் என்பதற்கு என்று சொல்லுகின்றாள்' என்ற பொருள் தவிர என்று சொல்லப்படுகிற' என்ற பொருளும் உண்டாதலால் 'என் திருமகள் மார்பன் என்று சொல்லப் 6. நஞ்சீயர் பட்டரை ஆச்சயித்துச் சீடரானவர்.