பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருப்பதிகள் 29 ஆரா அமுதே அடியேன் உடலம் கின்பு வில் அன்பாயே ரோய் அலைந்து கரைந்து உருக்கு கின்ற நெடு மலே சீரார் செந்நெல் கவரி வீசும் செழுர்ேத் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்! கண்டேன் எம்மானே! (1) (ஆரா - தெவிட்டாத, சீரார் --சிறப்புப் பொருந்திய: சவரி - சாமரை; ஏரார் - அழகு பொருந்திய) என்பது. இந்தப் பாடல்தான் நாதமுனிகட்கு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் பக்திக் கருவூலத்தைக் காண்பதறகு ஒரு திறவு கோலாக அமைந்தது. இத்திருவாய் மொழியில் நம் பூருவர்கள் பெரிதும் ஈடு பட்டிருந்தனர். இத்திருவாய்மொழிப் பாசுரங்கள் யாவும் கல் நெஞ்சத்தையும் உருக்குவன. இதனாலன்றோ திருவாய் மொழி முற்றிலும் மறைந்த நிலையிலும் இத்திருவாய் மொழிப் பாசுரங்கள் மேல் நாட்டிலிருந்து காட்டு மன்னார் கோயிலுக்குப் போந்த பாகவதர்களின் நாவில் நடமாடியது. ஆழ்வாரும் தாய்ப்பக்கம் கிட்டி முகம் பெறாத கன்றுபோல் அமைந்து நோவு படுமாப் போலே அவன் சந்நிதியில் தளர்ந்து கிடந்து ஆர்த்தியுடன் கூப்பிட்டு அலம்ரு கின்றார். ஆரா அமுதே : கடலில் உப்புச்சாறு (அமுதம்) குடிப் பார்க்கும் தேவயோதியில் பிறக்க வேண்டும், பிரமச்சரியம் அநுட்டிக்க வேண்டும். இத்தனையும் இருந்தால் ஒரு தடவையே உண்ணக் கூடியதாக இருக்கும். வடநாட்டில் லோகசாரங்க மகா முனிகள் என்ற ஒருவர் வசித்து வந்தார். இங்குள்ள ஒருவன் ஆங்குச் சென்றான். அவனை நோக்கி