பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சடகோபன் செந்தமிழ் முனிகன், 'பிள்ளாய், தென்னாட்டில் விசேடம் ஏதாவது உண்டா?’ என்று வினவினார். அவன், "திருவாய்மொழி என்ற ஒரு பிரபந்தம் அவதரிக்க, அதனைச் சீடர்கள் மேற் கொண்டு போரக் கொண்டாடிக் கொடுபோக நின்றார்கள்' என்று பதிலிறுத்தான். உடனே முனிகள், அதிலே ஒரு பாசுரத்தைக் கூறுக’ என்ன, அவனும் “ஆராவமுதே' என்கின்ற இத்துணையே எனக்குத் தெரியும்' என்று பதிலிறுத்தான். முனிகளும் 'நாராயணன் முதலிய நாமங் கள் இருக்க, இங்ங்னேயும் ஒரு பொருள் உண்டாவதே' என்று அதனைக் காண மிக்க ஆவலுடையாராய் இச் சொல் நடையாடுகின்ற தேசத்துக்குப் போவோம்' என்று அப்பொழுதே புறப்பட்டுப் போந்தார். இஃது சட்டில் கண்ட வரலாறு:. ஆழ்வார் அர்ச்சையிலிருக்கும் எம்பெருமானைச் செழு நீர்த் திருக்குடந்தை, ஏரார் கோலம், திகழக் கிடந்தாய் எம்மானே’ என்று கூறிச் சேவிக்கின்றார் . அதன்பின்னர் 'திருக் கண்கள் மலர்த்தாலன்றித் தரிக்ககில்லாத அடியேன் இப்படியே பட்டினி கிடந்து போக வேண்டியது தானோ? (2): கழிகின்ற நாட்களெல்லாம் உன் திருவடிகளையே பற்றிக் கொண்டு நடக்கும் படி கடைக்கண் நோக்க வேண்டும் (3); நான் உன்னைக் காண்பான் அலப்பு ஆய் (அலமந்து) ஆகாயத்தை நோக்கி அழுவன், தொழுவன்’ (4); உன் சரணம் தந்து என் சன்மம் களைவாய் (7): என் அநாதி பாவங்களைத் தொலைத்து உன்னைப் பெறுவதொரு நல் விரகு பார்த்தருள வேண்டும் (6); உடல் தளர்ந்து என் உயிர் சரிந்து போம்போது இளையாது உன் திருவடிகளையே ஒரு மிக்கப் பிடித்துப் போகும்படி திருவுள்ளம் கொள்ள வேண்டும் (8): உன் திருவடிகளைச் சேரும்படி நீயே வழி செய்ய வேண்டும் (5); நான் கண்டு. அநுபவிக்கும்படி என் முன் வருதல் வேண்டும் (9):உனக்கு அடிமைப்பட்ட பிறகு