பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருப்பதிகள் 33 தேற்றம், சீற்றம்-அருள், தழல்-நிழல், என்று இவை எல்லா வற்றாலும் கண்டு கோடற்கரியவன் திருவிண்னகரப்பன் (2); இன்பம் நுகர்ந்திருக்கும் நகரத்திலுள்ளார் - பயிர்த்தொழில் செய்து கொண்டு தேக பாத்திரை நடத்திக் கொண்டிருக்கும் நாட்டுப் புறத்திலுள்ளார், அறிவு - அறியாமை ஒளி இருள் பூமி - ஆகாயம் என்று இருப்பவன் திருவிண்ணகர் மேய பிரான் (3) :புண்ணியம் - பாவம், புணர்ச்சி. பிரிவு, நினைவுமறதி, உண்மை - இன்மை என்று சிறப்பாகத் தோன்று கின்ற விபூதிகள் யாவும் திருவிண்ணகரப்பன் கருனையால் உண்டாயின (4); வஞ்சனை - நேர்மை, கருமை - வெண்மை மெய் - பொய் இளமை - முதுமை, புதுமை - பழைமை இவை திருவிண்ணகரப்பன் வைத்து வளர்க்கின்ற சோலை கள் (5); மூன்று உலகங்கள் - பரமபதம், மகிழ்ச்சி - சீற்றம், சீதேவி - மூதேவி, புகழ் பழிப்பு என்ற நிலையில் எழுந்தருளி யிருப்பவன் விண்ண கரப்பன் (6); பரஞ்சுடர் - உடம்பு, உலக உடம்பு, கண்களுக்குப் புலனாகாத் திருமேனி, அவதாரத் திருமேனி, நீண்டநாள் நிலைபெற்றிருக்கும் திருமேனி, வஞ்சனையான காரியங்களைச் செய்பவன் என்று விண்ண கரில் எழுந்தருளியிருப்பவன் திருவடிகளன்றிப் புகல் ஏதும் இல்லை (?); தேவர்க்குச் சிறந்த புகல் இடம் . அசுரர்க்குக் கொடிய யமன், சரண் அடைந்தவர்களைக் காத்தல் - அடையாதாரைக் காவாதிருத்தல் என்ற நிலையில் எழுந்தருளியிருப்பவன் என்னை ஆளும் அப்பன் (8): விண்ணகரான் எனக்கு அப்பன், செவிலித்தாய், நற்றாய்; எனக்குப் பொன்னைப் போன்றவன், மணியைப்போன்றவன் முத்தைப் போன்றவன் (9); நிழல் - வெயில், சிறுமை - பெருமை, குறுமை - நெடுமை, திரிபவை - நிற்பவை, மற்றும் ஆயவை - அவையல்லவை என்ற நிலைகளிலுள்ள விண்ண கரப்பனின் திருவடிகளன்றி வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லை" (10) என்கின்றார். இந்த மனநிலையில் ஆழ்வாரின், Fー3