பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சடகோபன் செந்தமிழ் என்பது ஆழ்வார் திருவாக்கு. எம்பெருமானின் திருநாமம் இப்பக்குடத்தான் என்பது; இவன் தனது வலது கையில் ஒரு சட்டி நிறைய அப்பங்கள் வைத்திருப்பதைக் காணலாம், (5), திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானை நம்மாழ்வார் கண்ணபுரத்து ஆதியான் என்று குறிப்பிடுவர். குலசேகரப் பெருமாள் கண்ணபுரத்துக் கரு மணி (பெரு. திரு.8) என்று பேசித் தாலாட்டுவர். பெரியாழ் வாருக்கு இந்த எம்பெருமான கண்ணபுரத்து அமுதமாக" (பெரியாழ் திரு. 1.5:8) இனிப்பன். திருமங்கை மன்னன் 100 பாசுரங்களாலும் (10 திருமொழிகள்) வேறு இரண்டு தனிப் பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்து மகிழ்வர். நம்மாழ்வார் மாலை கண்ணி (திருவாய் 9.10) என்ற திருவாய் மொழியால் வழிபடுவர். முதல் பாசுரத்தில் வேலைமோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்’ என்று கூறி யிருப்பதால் ஒரு காலத்தில் கடல் இவ்வூருக்கருகிலிருந்து இப் போது ஒதுங்கிப் போயிருத்தல் கூடும் என்று நினைக்கத் தோன்றுகின்றது. . திருகண்ணபுரம் : இஃது ஒரு சிற்றுார். திருவாரு தையும் மாயூரத்தையும் இணைக்கும் இருப்பூர்தி வழியில் நன்னில்ம் என்ற நிலையத்திலிருந்து சுமார் ஒன்பது கி.மீ. தொலைவிலுள்ளது. நன்னிலத்தி விருந்து பேருந்து வசதி உண்டு. நன்னிலத்திலிருந்து நாகூர் செல்லும் பேருந்தில் ஏறி திருப்புகலூர் (அப் 'ாடிகள் முத்தி பெற்ற தலம்) இறங்கி ஒரு குதிரை வண்டி அல்லது மாட்டு வண்டியை அமர்த்திக் கொண்டு சுமார்2 கி.மீ. தொல்ைவிலுள்ள (தென் திசையில்) கண்ணபுரத்தை அடைத்ல் வேண்டும் வழியிலுள்ள ஆற்ற்ைக் கடக்க பாலம் உண்டு. 1968ஜூன் திங்கள் நான் குடும்பத்துடன் இந்த எம்பெரு மானைச் சேவித்ததை நினைவு கூர்கின்றேன். எம் பெருமானின் திருநாமம் செளரிராஜன். திருத்தலத் தின் முழு விவரங்களையும் இவ்வாசிரியரின் சோழ காட்டுத் திருப்பதிகள்-இரண்டாம் பகுதியில் (5ஆவது கட்டுரை) கண்டு தெரியலாம்,