பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருப்பதிகள் 4: இத்திருவாய் மொழியின் முதல் நான்கு பாசுரங்கள் பக்தியோகத்தையும் அடுத்து வரும் ஐந்து பாசுரங்கள் பிரபத்தி நெறியையும் புகட்டுகின்றன. பத்தாவது பாசுரம் இரண்டு நெறிகளையும் அதுட்டிக்க இயலாதவர்கள் ‘கண்ண புரம்’ என்ற பெயரைச் சொன்னாலே போதும் என்கிறார். திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர்பாடு சாராவே' என்பது ஆழ்வார் வாக்கு. இனி பாசுரங்களில் ஆழங்கால் படுவோம். . * மாலை கண் ணித்தொழு தெழுமினோ வினைகெட காலை மாலை கமலமலர் இட்டு ஓர் வேல்லமோ தும்மதில் சூழ் திருக் கண்ணபுரத்து ஆலின் ஆஅமர் தான்அடி இணைகளே (1) (வேலை-கடல்; ஆலின்மேல்-நீரின் மீது; ஆல் அமர்ந் தான்-ஆவிலையில் கண் வளர்ந்தவன்) ஆவிலைப் பள்ளியான் திருவடிகளின் மீது இரவும் பகலும் தாமரை மலர்களை இட்டு வழிபட்டால் நம் வினைகள் எல்லாம் கெட்டொழியும் என்கின்றார். காலை மாலை, என்பதற்கு பகலும் இரவும் என்று பொருள் கொள்ளுதல் சிறப்பு. கமல மலர் இட்டு என்பதால் ஒருவகைப் பூதான் சிறப்பு என்பது பொருளன்று: அவனுக்கு ஆகாத பூ இல்லை. கள்ளார் துழாயும் கனவலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலுமுன் கண்டக்கால் புள்ளாயோ ரேனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று உள்ளதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே - - (பெரி. திரு. 11.7:6) என்ற மங்கை மன்னன் பாசுரம் ஈண்டு அறுசந்திக்க உரியது. அடுத்த பாசுரத்தில் கள்ள விழும் மலரிட்டு இறை ஞ்சுமின்' (2) என்று அருளிச் செய்கையாலே சிறந்த மலரேயாக வேண்டும்