பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருப்பதிகள் 43 சரணம் ஆகும்தன தாளடைந் தார்க்கெல்லாம் மரணமா னால்வைகுங் தம்கொடுக் கும்பிரான் (5) (சரணம்.இரட்சகன்: தாள்.திருவடி) இதில் எம்பெருமான் திருவடிகளை உபாயமாகப் பற்றினவர் கட்கு அவன் அவர்களை இந்த உலகத்தினின்றும் விடுவித்துத் திருநாட்டில் கொண்டு போய் வைப்பான் என்கின்றார். இத் திருவாய் மொழிக்கு இதுவே உயிரான பாசுரமாக இருப்பது. "ஆழ்வீர்! உமக்கு மரணமானால் வைகுந்தம் கொடுக்கக் கடவேன்' என்று எம்பெருமான் அருளிச் செய்ததையே மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்" என்கின்ற சொல் நயத்தாலே வெளியிட்டருள்கின்றார். இவ்வுடல் முடியுந்தனையும் பொறுத்திரும்; முடிந்தவுடனே நுகர்வினை (பிராரப்த கருமங்கள்) முடிந்து விட்டதாகக் கொண்டு பழ வினையை (சஞ்சித கருமங்களை) துடைத் தெறிவதற்குப் பொருளாக்கி இவ்வளவுடன் பிறப்பு வட்டத்தைமுடித்திட்டுப் பொய்ந் நின்ற ஞாலமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம் பும் இந்நின்ற நீர்மை இனியாமுறாமை (திருவிருத் !) என்று நீர் முன்னர்ப் பிரார்த்தித்த படியே செய்து தலைக் கட்டு வேன்’ என்று ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் அருளிச் செய்தது இங்குத் திரும்பவும் கூறப்பட்டது. "அன்பினாகும் தனதாளடைந்தவர்க்கெல்லாம் (6) என்று அடுத்துப் பேசுகின்றார் ஆழ்வார். தனது திருவடி களை அடைந்தவர்களுள் இன்னார் இனியார் என்று வேறு பாடு பாராமல் வசிட்ட சண்டாள வியாகமற எல்லார்க்கும் தக்க நட்பாக்கிக் கொள்பவன் எம்பெருமான். அன்றியும், பிரகலாதன் அசுரனாகப் பிறந்திருந்தும் அவனது அன்பையே