பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருப்பதிகள் 45 பலனை உத்தேசித்து அதற்குச் சாதனமாக இவன் திருவடி களை அடைதல் ஒருவிதம்; அங்ங்ணமின்றி பலனும் இதுவே: அதற்கு உபாயமும் இதுவே என்று கொண்டு அடைதல் மற்றொருவிதம். ஈண்டு இரண்டாவதாகச் சொன்னவர்களே “தனதாளடைந்தவர்கள் என்று சிறப்பிக்கப் பெறுகின்றனர். இப்படிச் சுலபனாகிச் செய்வது என்னவெனில் "பிணியும் சாரா பிறவிகெடுத்தாளும்'. துக்கங்களையும் துக்கங்களுக்குக் காரணமான சம்சாரத்தையும் போக்கி அடிமைகொள்வான். ஆகவே திருநாட்டில் இருக்கும் இருப்பில் ஒன்றுக்கும் குறை யாது திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் செளரிப் பெருமாளின் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாகப் பற்றுங்கள் என்கின்றார் ஆழ்வார். இனி முத்தாய்ப்பாக ஆழ்வார் கூறுவது : பாதம்கா ளும்பணி யத்தணி யும்பிணி ஏதம்சா ரா;எனக் கேல்இனி யென்குறை வேதகா வர் விரும்பும் திருக்கண் ணபுரத்(து) ஆதியா னை அடைக் தார்க்கல்லல் இல்லையே (9) (நாளும்-எப்போதும்; பணிய-சேவிக்க; பிணி-நோய் ஏதம்-பாவங்கள்; வேதநாவர்-வைதிகர்கள்; ஆதி யான்-முழுமுதற் கடவுள்) என்ற பாசுரம், பிறருக்கு உபதேசம் செய்வது கிடக்கட்டும்; தாம் முன்னம் அவனை ஆச்ரயித்துக் குறைதீர்ந்த படியைப் பேசிக் களிக்கின்றார். அதில், 'அவனது திருவடிகளை அடையவே அநாதி காலமெல்லாம் திரண்டு கிடந்த பாவங் கள் தொலைந்தன. இனிமேல் பாவங்கள் வந்து சேரா, இஃது