பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சடகோபன் செந்தமிழ் என் அநுபவம். நான் குறை தீரப் பெறவேண்டும் என்று சொல்லுகின்றேன். வேதம் அறிந்த வைதிகர்கள் விரும்பி வாழும் திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதி மூலத்தே அடைந்தார்க்கு அல்லல் போம்; வல்லினைபோம், அன்னை வயிற்றிற் பிறந்த தொல்லைபோம்; போகாத் துயரங்களும் போயொழியும்” என்கின்றார். இறுதிப் பாசுரம் பக்தியையோ பிரபத்தியையோ அதுட்டிக்க முடியாதவர்கட்கு ஒர் எளிய யோசனை கூறுகின் றார். அஃது என்ன? அதைப் பாரசுத்தில் காண்போம். இல்லை யல்லல்; எனக்கேல்இனி யென்குறை அல்லி மாதர் அமரும்திரு மார்பினை கல்லில் ஏய்ந்த மதில்சூழ்ந்திருக் கண்ணபுரம் சொல்லநா ருந்துயர் பாடுசா ராவே (10) (அல்லல்-துக்கங்கள்; அல்லி-தாமரை, கல்வில் ஏய்ந்த கற்பணிமிக்க; நாளும்-ஒரு நாளும் துயர்-துக்கம்) இதில் பக்தி அல்லது பிரபத்தியை அதுட்டிக்க இயலாதவர் கள் திருக்கண்ணபுரம் என்ற பெயரைச் சொன்ன அளவிலே எல்லாத் துயரங்களும் ஒரு நாளும் சாரா என்கின்றார். இத் துடன் சோழ நாட்டுத் திருத்தலப் பயணம் நிறைவு பெறு கின்ற்து. -