பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 - சடகோபன் செந்த மிழ் சும்மா விடுவார்களா? அவர்கள் அமுதகலசத்தைத் துரங்கிக் கொண்டு ஒடத் தொடங்குகின்றனர். தேவர்கள் திருமாலிடம் முறையிட, அவர் மோகினி வடிவத்துடன் அசுரர்கள் முன்னே காட்சி அளிக்கின்றார், இருசாராருக்கும் அமுதத்தைத் தாமே பங்கிட்டுத் தருவதாகக் கூறிக் கலசத்தை வாங்கிக் கொள்ளுகின்றார். அமுதத்தைப் பங்கிடவும் முனைகின்றார், தேவர்கள் பக்கம் கலசமும் அகப்பையுமாக வருங்கால் அமுதத்தைத் தாராளமாக வார்க்கின்றார். அசுரர்கள் பக்கம் வருங்கால் தமது மோகனப் புன்னகையாலும் ஆடலாலும் பாடலாலும் அவர்களை மயக்குகின்றார் அ. மு. த ம் வார்க்காமலேயே. இறுதியாக அசுரர்கட்கு ஒருதுளிகூட இல்லாமல் அமுதம் காலியாகி விடுகின்றது. இங்ங்ணம் அசுரர் களை ஏமாந்த சோணகிரிகளாக்க எடுக்கப் பெற்றதே மோகனாவதாரம். இந்த அவதாரம் எழுந்ததலமே மோகனூர் அதுவே மோகூர்’ எனக் குறுகி, திரு' என்ற அடையுடன் சேர்ந்து திருமோகூர்’ என்றாயிற்று. இந்தத் திவ்விய தேசத்தை நம்மாழ்வாரும் திருமங்கை யாழ்வரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். நம்மாழ்வார் 'தாளதாமரை (10.1) என்ற ஒரு திருவாய்மொழியால் மங்களா சாசனம் செய்துள்ளார் காள மேகத்தை யன்றி.டிற் றொன்றிலம் கதியே (1) என்பது முதற் பாசுரம். கொடிய வெப்பத்தில் அடிபட்டவன் குளிர்ந்த தடாகத்தையோ காளமேகம் பொழியும் மழையையோ எதிர்பார்ப்பது இயல்பேயன்றோ? அங்ங்ணமே நம்மாழ்வாரும் தம்முடைய இருள் தருமா இவ்வுலக வாழ்வெல்லாம் தொலையப் பெறும் சமயத்தில் காளமேகப் பெருமானை அநுபவிக்கிறபடியைத் தெரிவிக்கின்றது. இவர் திருவாய் மொழி. தம் திருமேனியின் கட்டுக் குலைந்த நிலையில் தம் முடிவு அணித்தென்று அறுதியிட்டுக் கொண்டு