பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சடகோபன் செந்தமிழ் நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை யாழ்வார் என்ற ஆறு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். நம்மாழ்வார் 2. 10.; 3.; 10, 7 என்ற மூன்று திருவாய்மொழியாலும் 10, 8; 1, 6, என்ற தனிப்பாசுரங் களாலும் மங்களா சாசனம் செய்துள்ளார். நம்மாழ்வாரின், வருமழை தவழும் மாலிருஞ் சோலை (2. 10 : 4) என்ற திருவாய்மொழியின் அடியில் நம் மனம் ஆழங்கால் படுகின்றது. 'மழை தவழும் என்ற அடைமொழியே போதுமாயிருக்க வரு' என்ற மேலும் ஓர் அடைமொழி கொடுத்த நயத்தை நம்பிள்ளை காட்டுவதில் நம்மனம் ஈடுபடு கிறது. ஊருக்கு இரண்டாயிற்று மழை நின்ற இடத்தில் நின்று வர்ஷிப்பதொரு மேகமும்; போவதும் வருவது மாயிருப்பதொரு மேகமும்” என்பது ஈட்டு ரீசூக்தி, மேகங் கள் மலைகளில் பெரிய கொடு முடிகளில் இளைப்பாறி இளைப்பாறி மீண்டும் செல்கின்றனவாதலின் மழை தவழும்" என்று கூறுகின்றார் போலும். சித்தும் அசித்தும் எம் பெருமானின் திருமேனியாக இருப்பதாகக் கருதுவது வைணவ சித்தாந்தம். இது கருதியே, ‘மாலிருஞ் சோலை, பதியது ஏத்தி எழுவது பயனே' (2. 10 : 2) என்று கூறி புள்ளதைச் சிந்திக்கின்றோம். திருக்கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். உற்சவர் அபரஞ்சி என்ற பொன்னால் செய்யப் பெற்றவர். தாயாருக்குச் தனிச் சந்நிதி உண்டு. இது திருக்கோயிலின் தென்புறம் உள்ளது. இவரைத் "தணிக்கோயில் தாயார் என்று வழங்குவதும் உண்டு. அழகர்மீது பிள்ளைப் பெருமாள் ஆய்யங்தார் * இயற்றிய 'அழகர்.அந்தாதியும்’ வேம்பத்துரார் இயற்றிய அழகர் கலம்பகமும்’ மிகு புகழ் வாய்ந்தவை; செல்வாக்குடன் பயின்று வருபவை.