பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிர மாலை பாவலர் மணி', சித்தன், வைணவமணி' பல் மருத்துவன் வித்துவான் மு. இராதாகிருஷ்ணன் புதுவை சகரென்னும் மாமுனிபோல் பிறந்த போதே துறந்தவர்தம் சடகோபர் அவர்தம் ஆற்றல் சகந்தனிலே விரித்திடயார் சதுரர்? அந்தச் சாமி,உயர் சேனையர்கோன் அவதா ரந்தான்! அகத்தனிலே உன்னுதொறும் அமுதம் பெய்யும் அரியதமிழ் இவர் தந்தார்! காசி மாறர் பகர்ந்த தமிழ் கேட்பதற்கே ஆண்டு தோறும் பத்துநாள் ஒதுக்குகிறார் அரங்கத் தண்ணல்! வண்பொருதை யாற்றின்தென் கரையில் வாய்த்த வளவயல்சூழ் திருநகரி எனும்பேர் பூண்ட தண்குருகூர் நகருறையும் காரி என்னும் தவமுடைய தல்லார்க்கும், பொறைக்கோர் - சான்றாம்; பெண்குலத்துப் புகழ்விளக்கம் உடைய நங்கைப் பெருமாட்டி யாரவர்க்கும் உலகம் உய்ய மண்ணிலொரு வைகாசிப் பருவ மாக - மலர்ந்தவிசா கத்திலிவர் ஆவத ரித்தார்! அவதாரம் செய்தருளும் நாள்தொடங்கி அழுததிலை, முலையுண்ணும் அவதி இல்லை! தவராசன் போல்வாட்ட மின்றி, மெளனக் சாமியென இவரிருந்தார்! கண்கள் மூடி : இவரிருந்த நிலைகண்டே பெற்றோர் உள்ளம் எய்தியதாம் துன்பத்தை எழுதல் ஆமோ? நவமணியாய்க் குதுங்குடியுள் நின்ற நம்பி நல்வருளும் ஈதேனன் றயர்ந்தார் பெற்றோர்: