பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 53 புரீவைகுண்டம், நத்தம் (வரகுணமங்கை), திருக்குளந்தை, திருப்புளிங்குடி, தொலைவிலிமங்கலம் (இரட்டைத் திருப் பதிகள்) என்ற ஆறும் ஆற்றின் வடகரையிலுள்ளவை. இந்த நவ திருப்பதிகளையும் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய் துள்ளார். இத்திருப்பதி எம்பெருமான்மீது (அர்சாவதாரம்) பாடி யருளிய பாசுரங்கள் யாவும் பரத்துவத்தை மூதவிக்கின்றன என்பதைக் காணும்போது நாம் வியப்பில் ஆழ்கின்றோம். உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் (திருவாய் 4.9) பலவாறாகக் கதற, ஒரு விதமாக அவருடைய ஆர்த்தியை மாற்றவேண்டுமென்று திருவுள்ளம் பற்றின எம்பெருமான், திருநாட்டிலே திருமகளும் தானுமாக இருக்கும் இருப்பைக் காட்டிக் கொடுத்தருள, இவரும் கண்டு ஒருவாறு களிக்கப் பெறுகின்றார். உயர்வற உயர்கலம் (1.1), திண்ணன் வீடு' (2.2 மு. த லா ன திருவாய்மொழிகளிலும் எம்பெரு மானுடைய பரத்துவத்தை அருளிச் செய்திருந்த போதிலும் இத்திருவாய் மொழி (4.10) அர்ச்சையில் பரத்துவம் காட்டப் பெறுவதால் வீறு பெற்றிருக்கும். இத்திருத்தலத்தில் சேவை சாதிக்கும் எம்பெருமானுக்கு ஆதிநாதப் பெருமாள் என்று திருநாமம் ஆகையாலே, இவர் பக்கலில் பரத்துவத்தை" எடுத்துரைக்கப் பாங்காக இருக்குமென்று திருவுள்ளம் பற்று 3. எம்பெருமானின் திருமேனி பரம் (வைகுந்தத்தில் இருக்கும் நிலை), வியூகம் (திருப்பாற்கடவில் வாசுதேவன் சங்கர்ஷன்ன், பிரத்தியும்னன், அநிருத்தன் என்ற நான்கு நிலைகளில் இருக்கும் இருப்பு), விபவம் (எண்ணற்ற அவதார மூர்த்திகள்) அந்தர்யாமி (எல்லோருடைய இதய கமலத்தில் எழுந்தருளியிருக்கும் நிலை) , அர்ச்சை (திவ்விய தேசங்கள், பக்தர்களின் இல்லங்கள் இவற்றில் அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு திருமேனி கொண்டு நிற்கும் நிலை) என்ற ஐந்து நிலையில் இருக்கும்: