பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சடகோபன் செந்தமிழ் கின்றார் ஆழ்வார். உலகுக்கெல்லாம் முழுமுதற் காரண மான பொருள் எதுவோ அதுவே பரதெய்வம் என்றும் அதுவே உபாசிக்கத் தக்கதென்றும் உபநிடதங்கள் பறை சாற்றுகின்றன. இந்த ஆழ்வாரே பெரிய திருவந்தாதியில், முதலாக் திருவுருவம் மூன்றென்பர்; ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்-முதல்வா! கிகளிலகு கார்உருவா! நின்னகத்த தன்றே புகளிலகு தாமரைப் 蛙,{72} (இலகு-ஒத்து விளங்கும் புகர்-தேசு, ஒளி: இலகு-மிக்கு விளங்கும்; என்ற பாசுரத்தில் இச்சித்தாந்தத்தை நிலைநிறுத்துகின் றார். சீமந் நாராயணன் ஒருவனே பரத்துவம் என்பது தோன்ற முதல்வா என்று விளிப்பது கருதத் தக்கது." சேவிக்கும் பொழுதே எல்லாத் தாபங்களும் ஆறும் படியான திருமேனி கொண்ட தெய்வமே பரத்துவம் என்பது விளங்க 'நிகர் இலகு கார் உருவா!' என்றும் விளிக்கின்றார். இந்தப் பரதெய்வத்தை நினைந்தே இத்திவ்விய தேசம் பற்றிய திருவாய்மொழியில், ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்யா துமில்லா அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோ டுயிர்புடைத்தான் 6. முதலை வாயில் சிக்கிக் கொண்ட கசேந்திராழ் ஆானும் 'ஆதிமூலமே!’ என்று நாராயணனை ஒல சிட்-ழைத்த்தும் நினைவு கிர்த்தக்கது.