பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 57 மொழியாகப் பரிணமிக்கின்றது. பராங்குச நாயகியின் படுக் கையில் அவளுடன் படுத்துக் கொண்டு அவள் விரகதாபத் திற்கு உபசாரம் பண்ணிக் கொண்டு இருந்த திருத்தாயார் படுக்கையைத் தடவிப் பார்க்கின்ற போது தன் மகள் காணப் பெற்றிலள். அவளுக்குத் திருக்கோளுர் எம் பெருமானிடத்தி லிருந்த கழிபெருங்காதலினை நன்கு அறிந்தவளாதலின் அப்பதிக்கே தன் மகள் சென்றிருத்தல் வேண்டும் என்று அறுதியிட்டுரைப்பதாகச் செல்லுகின்றது இத்திருவாய் மொழி தனியே சென்ற தன் மகளின் போக்கை நினைந்து கவல்கின்றாள் திருத்தாயார். - திருத்தாயார் பேசுகின்றாள்: உண்ணும் சோறு பருகுர்ே தின்னும்வெற்றிலையுமெல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றென் றேகண்கள் நீர்மல்கி மண்ணினுள் அவன் சீர் வளம்மிக் கவனுரர் வினவி - திண்ணம் என்னிள மான் புகு மூர்திருக் கோளுரே ( ) (வினவி.விசாரித்து; புகும் ஊர்.சேர்ந்த இடம்) என்பது இத்திருவாய் மொழியின் முதற் பாசுரம். முதல் இரண்டடிகளில் ஆழ்வாருடைய உண்மையான திலையைக் காணமுடிகின்றது. சோறு, நீர்,வெற்றிலை இவற்றின் அடை மொழிகளின் நயம் உய்த்துணரத் தக்கது. வயிறு நிறைய உண்டவனுக்கு அறுசுவை உணவு கிடைப்பினும் அஃது உண்ணும் சோறாகாது; கங்கைக் கரையில் திரிபவனுக்குக் கிணற்றுநீர் பருகும் நீராகாது. ஆகவே, பெரும் பசியனுக்குக் கிடைத்த சோறுதான் உண்ணும் சோறு; பெருவிடாயனுக்குக் கிடைத்த நீர்தான் பருகுநீர். பெரும் பசியனுக்குச் சோற்றி