பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சடகோபன் செந்தமிழ் லும், விடாய்த்தவனுக்கு நீரிலும் எப்படிப்பட்ட அவா இருக்குமோ அப்படிப்பட்ட அவா ஆழ்வாருக்கு பகவத் விஷயத்தில் இருந்தது என்பது கருத்து. தனக்கு எல்லாம் கண்ணன்' என்று பலகால் சொல்லிக் கொண்டு நீர்மல்கு கண்ணினராயிருப்பதே ஆழ்வாருடைய இயல்பாகும். இப்படிப்பட்ட பராங்குச நாயகி "அப்பெரு மானுடைய திருக்குணங்களும் திவ்வியமான ஐசுவரியமும் மிக்கு விளங்கும் திருக்கோளூர் எங்கு உள்ளது? எவ்வளவு துரம் நடக்க வேண்டும்?” என்று வினவிக் கொண்டே திருக் கோளுர்க்கே சென்று சேர்ந்திருப்பாள். வேறு எங்கும் போவதற்குக் காரணம் இல்லை. இது திண்ணம்' என்கின் றாள் திருத்தாயார். "புகுமூர் என்ற இடத்து ஈடு; காட்டுத் தீயிலே அகப் பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாப் போலே, சம்சாரமாகிய பாறை நிலத்தில் காட்டுத் தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய் கையும் பொழிலும் போலேயிறே. புகுமூர்’ என்கையாலே புக்கார் புகுமூர் அன்றென்கை'. இன்சுவைமிக்க இஃது எண்ணி மகிழ்வதற்குரியது. எம்பெருமானார் திவ்வியதேச யாத்திரையாக எழுந்தருளுகையில் திருக்கோளுரை நோக்கிச் செல்லுங்கால், அப்போது அவ்வூரினின்றும் வெளியேறுகின்ற ஒர் அம்மையாரைக் கண்டார். அவரைப் பார்த்து 'எங்கு நின்றும் புறப்பட்டபடி?’ என்று வினவ, அந்த அம்மையார் 'திருக்கோளுரில் நின்றும் என்று பதில் உரைத்தார். அது கேட்டு யதிராசர் அவ்வூர் புக்க பெண்களும் வெளியே போகக் கடவர்களாக இருப்பார்களோ?’ என்றாராம். புகு மூர் என்ற சொல்லின் சுவடறிந்து அருளிச் செய்த ஆசாரி யரின் வினாவின் உட்பொருள் சிந்தித்து மகிழத்தக்கது." மேலும் இத்திருவாய்மொழியின் விளக்கம் வேண்டு வோர் பாண்டி காட்டுத்திருப்பதிகம் (கட்டுரை.10) 安厝了爱品。 - - - -