பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

101


ஆட்டக்காரர்களே நன்கு பயன்படுத்தி செழிப்பான சூழ்நிலையை உருவாக்கி உதவும். முடியும்.

ஊ) கரடிப் பிடி முறை (Bear Hug)

பாடி வரும் எதிராட்டக்காரரை நேருக்கு நேராக சந்தித்து, அப்படியே முன்புறமாகவே பிடித்து, அதாவது அவரது மார்பும் தன் மார்பும் (Chest) பொருந்தும்படி, அப்படியே மேல் நோக்கி ஆளைத் துக்கிக்கொள்ள வேண்டும்.

ஆள் பாடி வரும்பொழுதே, இரண்டு கைகளுக் கிடையில் அவரது உடலை வரவிட்டு, அவரது இடுப்புப்பகுதி(பின்புறத்தில்)யில் கைகளைக் கோர்த்து, தரையிலிருந்து அப்படியே உயரத்தில் தூக்கி நிறுத்திவிட வேண்டும்.

பாடி வருபவர், பிடிப்பவரைத் தொட்டுவிட முன்னோக்கி வந்து முயற்சிக்கும் நேரத்தில், பின்னால் நகர்வது போல ஒரு பாவனை செய்துவிட்டு, திடீரென்று முன்னோக்கித் தாவி, ஆள்மேல் எகிறிப் பிடித்து, மேல்நோக்கித் துக்கி, தப்பிக்க முடியாமல் செய்கின்ற தன்மைக்கே கரடிப்பிடி என்கிறோம்.

இந்தப் பிடிமுறைக்குச் சரியான நேரம், சரியான மோதல் வேண்டும். இல்லையேல் அவர் முகத்தில் தன் முகத்தை மோதி, பற்களைத் தாக்கிக் கொள்ள என்று பேராபத்தும் நேரிடவும் கூடும். நல்ல அனுபவமும் பயிற்சியும் இந்த பிடி முறைக்கு நிச்சயம் தேவைப் படுகிறது.

அத்துடன் அல்லாது, நல்ல கனமான ஆட்டக் காரர்களால்தான் இப்படிப் பாய்ந்து எதிரியை தூக்கி