உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

சடுகுடு ஆட்டம்


நிறுத்த முடியும். (சாதாரண) எடையில்லாத ஆட்டக் காரர்களால் இந்தப் பிடி முறையை செய்ய முடியாது; செய்யவும் கூடாது.

எ) கை கால் பிடி முறை (Wrist and Ankle Hold)

பாடி வருபவர் குள்ளமான, கனமில்லாத ஆட்டக்காரர்களாக இருந்து, பிடிப்பவர் கனமான, எடை மிகுந்த பெரிய உருவ அமைப்புள்ள ஆட்டக்காரர்களாக இருந்தால், இந்த பிடி முறை பயன்படும்.

பாடி வருபவரை, தக்க சமயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவாறு, ஒரு கையால் அவரது கையைப் பற்றி இழுத்துக்கொண்டே, உடனே அவரது காலையும் மற்றொரு கையால் பிடித்து, அதே வேகத்தில் ஆளை மேலே தூக்கிவிட்டால், பாடுபவர் சமநிலை இழப்பதுடன், பாட்டையும் நிறுத்திட, ஆட்டம் இழந்து போவார்.

தாக்குதலும் எதிர் தாக்குதலும்

பாடி வரும் முறையைத் தாக்கி ஆடுதல் என்றால், பிடிக்கும் முறையை எதிர்த் தாக்குதல் என்று அழைக்கிறோம். தாக்குதலும் எதிர்தாக்குதலும் நிறைந்தவைதான் சடுகுடு ஆட்டமாகும்.

மல்யுத்தம் சத்தமில்லாமல் ஆளுடன் ஆள் மோதி, ஒருவரை ஒருவர் மடக்க முயற்சிப்பதாகும். சடுகுடு ஆட்டம் சத்தம் போட்டபடி, ஒரே மூச்சுக்குள் எதிரியை அல்லது எதிரிகளை மடக்கிட முயற்சிப்பதாகும்.

இந்த வல்லமை நிறைந்த விளையாட்டுப் போட்டியில், ஆளுடன் ஆள் மோதுவது, அலையுடன்