இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
104
சடுகுடு ஆட்டம்
அறிவார்ந்த தந்திரம் நிறைந்த, ஆட்டக்காரராக எல்லாரும் மாறினால், ஆட்டம் பார்ப்பவர்களுக்கு ஆனந்தமாக அமைவதுடன், ஆடுவோருக்கும் அற்புதமான ஆட்டமாக அமைந்துவிடும் என்பதை மறவாமல், பிடித்திட வேண்டும்.
இனி, தாக்கி ஆடுவோர், எதிர்த்தாக்குதல் நிகழ்த்துவோர் இவர்கள் பத்திரமான முறைகளில் ஆடத் தேவையான பயிற்சி முறைகளையும், பாதுகாப்பு வழிகளையும் தொடர்ந்து வரும் பகுதியில் விரிவாகக் காண்போம்.