உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

6. பலப்படுத்தும் பயிற்சி முறை

பொழுதுபோக்குவதற்காக விளையாடுகிறோம். அத்துடன் புளகாங்கிதம் அடைவதற்காகவும் விளையாடுகிறோம். அதையும் புத்திசாலித்தனத்துடன் பாதுகாப்பாகவும் பலம் பெறவும் விளையாட வேண்டும் என்பதைத்தான் விளையாட்டுத்துறை பங்கு பெறுவோரிடம் எதிர்பார்க்கிறது.

அதற்கு, அந்தந்த விளையாட்டை ஆட்டக்காரர்கள் எப்படி தங்கள் மனதில் ஏற்றுக் கொள்கின்றார்கள், எந்த வழியில் நடந்து தங்கள் குறிக்கோளை அடைகின்றார்கள் என்பதில்தான், அந்த நோக்கத்தில்தான் நடைமுறை செயல்கள் அமைந்திருக்கின்றன.

சடுகுடு ஆட்டமானது பலப்பரீட்சையில் இறங்கும் பொழுதே பண்பட்ட மனதினராகவும், பொறுமை சூழ் திலகமாகவும், பிறரை நேசிக்கும் அன்புக்களமாகவும்