பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

சடுகுடு ஆட்டம்


3. தகுதியையும் திறமையையும் ஆட்டக்காரர்களிடையே வளர்த்துவிடும் பொழுதே, அவர்கள் எப்பொழுதும் உடல் திறனை நன்கு காத்துக்கொண்டு விடுகின்ற கருத்தோட்டத்தைத் தினம் பழக்கத்திற்குக் கொண்டு வருதல், அதற்கான பயிற்சிகளின் பட்டியலைத் தந்து, அன்றாடம் அவர்களிடம் பயிற்றுவித்தல்.

ஏதோ அரை மணி நேரம், ஒரு மணி நேரம் ஒன்று சேர்ந்து எல்லோரும் ஆடி விட்டால் மட்டும் ஒரு குழு, அதற்குரிய திறமையில் உன்னத நிலையை அடைந்து விட முடியாது. அடிப்படை நுணுக்கங்களை ஆராய்ந்து, ஆராய்ந்து, அவற்றை நன்கு தெளிந்து, அனைவரும் கலந்து பேசி, தங்களது பலவீனத்தைத் தெரிந்து மாற்றிக்கொண்டு, வருகின்ற திறனை வளர்த்துக் கொண்டு ஆட முயல வேண்டும்.

முதல் இரண்டு பிரிவுகளுக்கேற்ற கருத்துக்களை, ஆட்டக்காரர்களுக்குரிய சிறப்புக் குறிப்புக்களிலும், பாடுபவர், பிடிப்பவர்க்கு உரிய திறன்கள் என்னும் பகுதிகளிலும் விரிவாகத் தந்திருப்பதால், அவற்றை விட்டுவிட்டு, மூன்றாவது பகுதியாகிய பலப்படுத்துதல் பயிற்சி முறைகளைப் பற்றி மட்டும் இங்கே காண்போம்.

உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகள் உடலைத் தரமாகவும், திறமாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன. அதனால் நினைப்பதற்கேற்ப உடல் உறுப்புக்கள் நெகிழ்ந்து, செய்கின்ற வேலையை செம்மையாகச் செய்திடும் வண்ணம் உழைக்கின்றன.

இதனால் திறன்கள் பெருகி, தேர்ந்த நிலையையும் அடைகின்றன. அதனால் மனோநிலையில் தெளிவும், பொலிவும் பிறக்கின்றன. ஆகவே கொடுக்கப்