122
சடுகுடு ஆட்டம்
பின்புறப் பகுதியினை இரு கைகளாலும் தாங்கியவாறு, கால்களை சைக்கிள் பெடல் மிதித்துச் சுற்றுவது போல் சுற்றுதல்.
7. ஒருவர் இடுப்பை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்திருக்க, முன்புறம் உள்ளவர் முன்புறம் இழுக்க, பிடித்திருப்பவர் அவரைப் பிடித்து நிறுத்த என்பது போல பயிற்சி செய்யவும்.
8. ஒருவர் இரண்டு கைகளையும் முன்புறமாகத் தரையில் ஊன்றி ஒரு காலை ஊன்றி நின்று, மறு காலை பின்புறமாக நீட்டியிருக்க, இன்னொருவர் நீட்டிய அவரது காலை இழுக்க, இவர் முன்புறம் இழுக்க என்பது போல பயிற்சி செய்யவும்.
9. இரண்டு ஆட்டக்காரர்கள் முதுகுப்புறமாக உரசுவதுபோல நிற்கவும். பிறகு ஒருவர் மற்றொருவரை முதுகில் சுமக்கவும். பிறகு அடுத்தவர் அவரை முதுகில் ஏற்றவும். அப்பொழுது கைகளை பூட்டு போல இறுக்கமாகப் பற்றிக் கொண்டுவிடவும்.
10. பச்சைக் குதிரை தாண்டும் பயிற்சியைச் செய்யவும்.
11. பஸ்கிப் பயிற்சி சிறந்த பயிற்சியாகும். நின்ற நிலையில் இருந்து ஒரடி முன் தள்ளி உட்கார்ந்து, பிறகு பின்புறமாகத் தாவி, பின்னர் முன்புறம் தள்ளி உட்காரும் பயிற்சியைச் செய்யவும்.
12. எதிராளியை தோள்களினால் தள்ளும் பயிற்சி செய்யவும்.