பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

127


10. நடுக்கோட்டருகில் நின்றவாறே, எதிராளியைத் தன்னைப் பிடித்து விடுமாறு தூண்டுகின்ற பாவனைகள் நல்லதுதான். அவ்வாறு எத்தனை ஆட்டக்காரர்களைத் தொட்டுவிட்டு வர முடியுமோ, அத்தனை பேர்களையும் தொட்டுவிட்டு வர முயற்சிக்கலாம்.

11. காலில் காலணி (Shoe) அணிந்து கொண்டு ஆடலாம் என்று விதி இருந்தாலும், காலணி இருக்கிறதே, விதியும் அனுமதிக்கிறதே என்று பழக்கமில்லாதவர்கள் காலணி அணிந்து கொண்டு ஆடக்கூடாது. அது அவர்கள் இயல்பான இயக்கத்தைத் தடுத்துவிடும். அத்துடன், ஆடுகளத் தரை வழுக்கல் நிறைந்ததாக இருந்தாலும் காலணிகளை அணிவது நல்லதல்ல. நிலைமைக்கேற்றபடி அனுசரித்து ஆடவும்.

சடுகுடு ஆட்டத்திற்கு நல்ல உயரமானவர்கள், சிறந்த தசை வலி நிறைந்தவர்கள், கட்டுமஸ்தான தேகம் உள்ளவர்கள், நீண்ட நேரம் ஆடினாலும் களைத்துப் போகாத நெஞ்சுரம் (Stamina) கொண்டவர்கள், மோதலுக்கும், சாடலுக்கும், போராட்டத்திற்கும் பயப்படாதவர்கள்தான் தேவை என்பதால், அப்படிப்பட்டவர்களைக் கொண்ட குழுவே எளிதில் வெற்றி பெறும்.

அடுத்து, பிடிப்பவர்களுக்கான சில முக்கியக் குறிப்புகளைக் காண்போம்.

பிடித்தாடுபவர்களுக்கு

1. பாடி வரும் எதிராட்டக்காரர் எத்தனை முயற்சிகளை மேற்கொள்கின்றார் என்று கணிப்பதுடன், அவரை பாடித் தொடும் கோட்டைக் கடக்க