பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

131


அடுத்த மூன்று புள்ளிகள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக் கொண்டு நிற்பது.

கடைசி இரண்டு புள்ளிகள் கைகோர்த்துக் கொண்டு நிற்பது.

ஒரு புள்ளிதான் பாடி வரும் ஆட்டக்காரர்.

பாடுபவர் அதே இடத்தில் நிற்கும்பொழுது, கடைசி இரண்டு பேரும் கைகோர்த்தபடி, பாடித்தொடும் கோட்டிற்கு பாடுபவர் பின்னே வந்திட, மூன்று பேர் சங்கிலிபோல் கோர்த்தவாறு அவர்களுக்கு முன்னே வர, இப்படியாக மூன்று சங்கிலிகளுக்கு இடையே வைத்து பாடுபவரைப் பிடிக்கும் முறை பின்பற்றப்படுகிறது.

10. இருக்கின்ற ஏழு ஆட்டக்காரர்களும் ஒவ்வொரு கையை கோர்த்தபடியே இருந்து, அப்படியே பாடுபவரை நடுவில் விட்டு, சுற்றி வளைத்துக் கொள்ளும் பிடி முறையும் உண்டு. எந்தெந்த இடத்திற்கு, எப்படி எப்படி அமைப்பு முறையும், பிடி முறையும் பயன்படுகின்றதோ, அப்படி பிடிக்கும் திறமையை ஆடிப் பழகும் நேரத்திலேயே சிறப்பாகக் கற்றுத் தேர்ந்திட வேண்டும்.

மேலே கூறிய முறைகள் எல்லாம் எளிமையாகத் தோன்றினாலும், நடைமுறைப் படுத்தும்பொழுது கொஞ்சம் கஷ்டமாகவே தெரியும். முனைப்பும், உழைப்பும், பயிற்சி செய்யும் வேகமும், கற்றுக் கொள்ளும் யூகமும் இருந்தால், எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.

11. அத்துடன், பிடித்தாடும் குழுவில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய இன்னொன்றும் இருக்கிறது. அதுதான் பாய்ந்தடிக்கும் முறை (Chase).