பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

சடுகுடு ஆட்டம்


பாடிக் கொண்டிருந்துவிட்டு, தன் பகுதியை நோக்கிப் போகின்ற எதிராட்டக்காரரை, பிடிக்கும் முறையில் இருந்த குழுவில் இருந்து ஒருவர், நடுக்கோட்டைக் கடந்து அவர் போகத் தொடங்கிய உடனேயே பாய்ந்தடித்துத் தொட்டுவிட்டு வந்துவிடுதல்.

அதாவது,

அ) பாடி முடித்தவர் மெதுவாகத் தன் இடம் நோக்கிப்போகும்பொழுது;

ஆ) எதிர்க்குழுவிற்குத் தன் முதுகைக் காட்டியவாறு மெய்மறந்து நடந்து போகும்பொழுது;

இ) பாடிச்செல்பவர் சுறுசுறுப்பாக இல்லாமல் மந்தமாக இயங்கும்பொழுது;

ஈ) பாடுகிற மூச்சை அவர் விடப்போகிறார் என்று அறிந்து கொண்டபொழுது

   உடனே ஒடிப் போய், பாடிக் கொண்டே அவரைத் தொட்டுவிட்டுத் தன் பகுதிக்கு வந்துவிடுவதையே பாய்ந்தடித்தல் என்கிறோம். இந்தக் கலையையும், இனிதே கற்றுக் கொண்டால், எளிதாக வெற்றி எண்ணைப் பெற்றிட இயலும். இதற்கு சுறுசுறுப்பான இயக்கமும், வேகமான பாய்ச்சலும், சமயோசிதப் புத்தியும், சந்தர்ப்பத்திற்கேற்ப தந்திர யுக்தியும் தேவையாகும்.