பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

37


எதிர்க்குழு பகுதிக்குள்ளே செல்ல வேண்டும். இதற்குப் பாடுதல் (Cant) என்று பெயர்.

4. எதிர்க்குழு பகுதியிலே இருக்கும்பொழுதே பாட்டைவிட்டு விடுபவர், ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப் படுவார் (Out).

5. எதிர்க்குழு பகுதியில் குறிக்கப்பட்டுள்ள பாடித் தொடும் கோட்டைக் கடக்காமல் திரும்பி வருகிற ஆட்டக்காரர் ஆட்டமிழப்பார். யாரையாவது தொட்டு விட்டு வந்தால், அப்பொழுது பாடித்தொடும் கோட்டைக் கடந்திருக்க வேண்டும் என்பது தேவையில்லை.

6. பாடிச் செல்பவர் எத்தனை பேர்களாக இருந்தாலும் ஒரே சமயத்தில் தொட்டுவிட்டு, பாடிக் கொண்டிருக்கும் மூச்சுடன் நடுக்கோட்டை வந்து அடைந்துவிட்டால், அவர் பத்திரமாக வந்து சேர்ந்தார் என்பதுடன், தொடப்பட்ட அத்தனை பேரும் ஆட்ட மிழப்பார்கள் (Out). தொடப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெற்றி எண் என்று தொட்ட குழுவின் வெற்றி எண் பட்டியலில் குறிக்கப்படும்.

7. ஆட்ட நேரத்தில் பாடிச் செல்பவரோ, பிடிப்பவர்களோ ஆடுகள எல்லையை விட்டு வெளியே சென்றால், வெளியில் சென்றவர்கள் ஆட்டமிழப்பார்கள் (Out).

8. பாடிச் செல்பவர்களும் பிடிப்பவர்களும் பிடித்து இழுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்பொழுது தொடர் இடங்கள் பயன்படுகின்றன. போராட்டம் முடிந்த பிறகு, அதில் ஈடுபட்ட ஆட்டக்காரர்கள், தொடர் இடம் வழியாக நடந்து, தங்களது ஆடுகளப் பகுதிக்குள் சென்று கொள்ளலாம்.