பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

39


வெளியேற்றப்படும்பொழுது, உள்ளே சென்று ஆடிடத் தயாராக இருக்க வேண்டும்.

கபாடி ஆட்டத்தின் முக்கிய ஆட்ட முறையின் விளக்கத்தை இதுவரை அறிந்து கொண்டோம்.

பங்கு கொள்கின்ற ஆட்டக்காரர்களின் உடல் நலத்தை, சுறுசுறுப்பை, மன உறுதியை, தைரியத்தை, முன்னுணரும் சாதுரியத்தை வளர்த்து விடுவதில் வல்லமை பொருந்தியதாக கபாடி ஆட்டம் விளங்கி வருவதால், இளைஞர்களையும், சிறுவர் சிறுமிகளையும் மிக எளிதாகத் தன் பக்கம் கவர்ந்துகொண்டு, அதிக வேகமாக, அற்புதமாக வளர்ந்து வருகிறது.

சிறந்த பொழுது போக்கு ஆட்டமாகவும், மனக்களிப்பினை மிகுதிப்படுத்தும் ஆட்டமாகவும் திகழ்கின்ற கபாடி ஆட்டத்தை, பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் ஆடக்கூடிய இனிய முறைகளை அடுத்த பகுதியில் காண்போம்.