பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சடுகுடு ஆட்டம்


4. உடலுடன் உடல் மோதும்போது வலியும் வேதனையும் ஏற்படுவது சகஜமே. அப்பொழுது எரிச்சலும், இனம் புரியாத கோபமும் எழுவதும் இயல்பே. அந்த நிலையிலும் அமைதிகாத்து, அறிவுப்பூர்வமாக, எந்தவிதமான சண்டை சச்சரவுகளும் நேராது பார்த்துக் கொண்டால்தான், நட்புறவுடன் தொடங்கும் ஆட்டம் இறுதிவரை நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை தளர்த்தாதவாறு நிம்மதியான இறுதிக்கட்டத்தை அடையும் என்பதிலும், அப்படி அமைத்தால்தான் பார்வையாளர்களும் ஆர்வத்துடன் வந்து பார்த்து ஆனந்தம் அடைவார்கள். மாறுபட்ட நிகழ்ச்சிகள் நடந்தால், அது ஆட்டத்தின் வளர்ச்சியைப் பாதிப்பதுடன், ஆட்டக்காரர்கள் மேலும் ஒருவித வெறுப்பினை வளர்த்துவிட, மரியாதை இல்லாத நிலைமையையும் உண்டாக்கிவிடும்.

5. தங்கள் பகுதிக்கு வருபவரைப் பிடிக்க பல பிடி முறைகள் (Holds) உண்டு. விரல்களைப் பிடித்து இழுப்பது, மணிக்கட்டைப் பிடித்து நிறுத்துவது, ஒரு காலை கோர்த்து, பாடி வருபவரின் கால்களைத் தடுத்தல் என்பன போன்ற பிடிமுறைகள் உண்டு என்றாலும், ஒரே ஒரு பிடி மட்டும் விதிவிலக்காகத் தவிர்க்கப் பட்டிருக்கிறது. அதாவது கால்களால் கத்தரிக்கோல் போடும் முறை. அதாவது இரண்டு கால்களாலும் எதிராளிகளின் கால்களைப் பின்னிக் கொண்டு, போகவிடாமல், தடுத்து நிறுத்துவதாகும். இது தவறு என்று விதி குறித்திருக்கின்றபடியால், இந்தப் பிடி முறையை மட்டும் தவிர்த்துவிட வேண்டும்.

6. பலத்தைப் பிரயோகித்துத்தான் எதிரியைப் பிடித்திழுக்க வேண்டும் என்பதால், பிடிப்பவர்