உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

87


எதிரியின் கையைப் பற்றியிருப்பதைப் பாருங்கள். பிடிப்பவர் இரு கைகளும் ஒன்றுக்கொன்று இணையாக பின்னிக் கொண்டிருப்பது போல் இருக்கின்றன. இந்தப்பிடி பிடித்தவுடன், பாடுபவரைப் பற்றி, வேகமாக இழுக்கும் வலிமையும் சக்தியும் ஏற்பட்டு விடுகிறது. அதுவும் கையைச் சற்று உயரமாகத் துக்குகிற பொழுதுதான் இந்த முதலைப் பிடியைப் போட முடிகிறது. பிடித்தவுடன் பிடிபட்ட கை வலது கையாக இருந்தால், இடது பக்கமாக இழுக்கவும், இடது கை பிடிபட்டால் வலது பக்கமாக இழுக்கவும், அப்பொழுது தான் அவரது கையில் வலி ஏற்பட்டு, மீறி இழுக்க முடியாமற் போகும். அதனால் எளிதாகப் பிடித்து விடவும் முடியும்.

இனி, கால்களைப் பற்றிப் பிடிக்கின்ற முறைகளைக் காண்போம்.

2. கால்களைப் பிடித்து நிறுத்தும் முறை

அ) கணுக்கால் பிடி முறை (Ankle catch)

கணுக்காலைப் பிடித்து பாடி வருபவரை மடக்குவது என்பது எப்பொழுதும், எல்லோராலும் பின்பற்றப்