இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
88
சடுகுடு ஆட்டம்
படுகின்ற முறைதான் என்றாலும், இது மிக முக்கியமான முறை என்பதால், அவசியம் கற்றுத் தேர்ந்து கொள்வது தனிப்பட்ட நபருக்குப் புகழ் அளிப்பதுடன், தான் இருக்கும் குழுவிற்கும் நல்ல வெற்றியையும் தேடித் தரும்.
ஆடுகளப் பகுதியின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டிருக்கும் ஆட்டக்காரர்களே கணுக்கால் பிடி பிடிக்கும் வாய்ப்புள்ளவர்களாக விளங்குகின்றார்கள்.
பாடி வரும் ஆட்டக்காரர் நின்று கொண்டிருக்கும் பொழுது அல்லது ஒரு காலை நீட்டித் தொட முயலும் பொழுது, அல்லது பின்புறமாக முதுகைக் காட்டிப் பாடிக் கொண்டிருக்கும்பொழுது கணுக்காலைப் பிடிக்க நல்ல வாய்ப்புண்டு.
பிடிப்பவர்கள் நின்று கொண்டிருந்தால், கணுக் காலைப் பிடிக்க வாய்ப்பில்லை. முழங்கால் போட்டு உட்கார்ந்தோ அல்லது சற்று குனிந்தவாறு காலத்தை எதிர்பார்த்தவாறு காத்திருந்து, காலை நீட்டுகின்ற