பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சடுகுடு ஆட்டம்


பிடி தளராமல் வெற்றிகரமாக செயல்பட முடியும். ஆகவே, கணுக்கால் ஒன்றைப் பிடிக்கும்பொழுது மேலே தூக்கியோ அல்லது தரையோடு தரையாக அழுத்தியோ பிடித்துவிட வேண்டும் என்பதை நினைவில் கொண்டு ஆட வேண்டும்.

ஆ) இரு கணுக்கால்களைப் பிடிக்கும் முறை (Double Ankle catch)

பாடி வருபவரின் இரண்டு கால்களும் ஒரே இடத்தில் இருக்கும்பொழுது, முழங்காலிட்டு உட்கார்ந்த வண்ணம் அல்லது குனிந்த நிலையில் தயாராக இருக்கும் பிடிப்பவர், குபிர் என்று பாய்ந்து வீழ்ந்து இரண்டு கணுக்கால்களையும் சேர்த்துப் பிடித்துக் கொள்வதுதான் இரு கணுக்கால் பிடி என்று அழைக்கப்படுகின்றது.

ஒவ்வொரு கணுக்காலையும் ஒவ்வொரு கையால் பிடிக்கலாம். அல்லது இரண்டு கைகளையும் பயன்படுத்தி தன்னிடம் பிடிபட்டவரை கீழே விழச் செய்துவிடலாம். அல்லது ஏற்கனவே பயிற்சி நேரத்தில் பழகி வைத்திருப்பது போல, இரு கால்களைப் பிடித்தவுடனே மற்ற ஆட்டக்காரர்கள் வந்து, சூழ்ந்து கட்டிப் பிடித்து மடக்கிவிடலாம். இவ்வாறு, பாய்ந்து பிடிப்பதால், இந்தப் பிடி முறை வெற்றிகரமாக அமைவதுடன், ஆட்டத்தில் நல்ல பலனையும் அளித்து வருகிறது.

இ) ஒரு முழங்கால் பிடி முறை (Knee catch)

பாடி வருகின்ற ஆட்டக்காரரின் இரு கால்களும் இடைவெளி அதிகம் இருப்பது போல் தூரமாகவும், சற்று மடங்கிய நிலையிலும் இருக்கின்ற பொழுது, அதுவும்