உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

95


பார்க்காமலேயே முன்னால் இருப்பவர்களைப் பார்த்துக்கொண்டு பாடியவாறு இருக்கும்பொழுது, அந்த நிலையை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கும் பிடிபோடும் ஆட்டக்காரர், திடீரென்று உடனே பாய்ந்து பிடித்துவிட வேண்டும்.

பாடி வருபவர் சுற்றி உதைத்துத் தொடும் முறையில் (Roll Kick) காலால் மற்றவர்களை உதைத்துத் தொட முயற்சிப்பதை எதிர்பார்த்துத் தயாராக இருக்கும் பிடிக்கும் ஆட்டக்காரர் ஒருவர், இந்தப் பிடிமுறையை மிகவும் கச்சிதமாகப் பிரயோகிக்கலாம்.

இந்த இடுப்புப் பிடி முறை மிகவும் பயனுள்ள முறையாகும். ஆட்டத்தில் அதிகம் பயன்படுகின்ற முறையுமாகும்.

ஆளைப் பிடித்தவுடனே, அப்படியே தரையை விட்டு மேலே தூக்கிவிட்டால், பிடிபட்டவரால்