பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 ம.பொ.சிவஞானம் எடுத்துக்கொண்டு திருத்தங்கள் கோருகிற பகுதிக்கும் நடுவே இடைவெளி இருப்பதைப் பார்க்கிறோம். அவை ஒன்றொடொன்று முரண்பாடுடையவையென்று நான் சொல்லவில்லை. ஒன்றுக்கொன்று இணைந்திருக்கும் தன்மையைப் பார்க்கிறேன். 4 அதிகாரங்கள் மட்டும் மத்தியில் வைத்துக் கொள்ளும் கூட்டாட்சி முறை வேண்டும்: முழு அளவுக்கு மாநில சுயாட்சி வேண்டும்-என்று சொல்லிவிட்ட பிறகு, 'இதற்கான வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த ஒரு அரசியல் நிர்ணய மன்றத்தை அமைக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்" என்று கூறிவிட்டு அந்த வெள்ளை அறிக்கையை அரசு முடித்திருக்குமானால். இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். அரசமைப்பை விதி விதியாக விவாதிக்கக் கூடிய சூழ்நிலை இன்றில்லை. நமது சுயாட்சிக் கொள்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் தான் - அதாவது, மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்களை மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டுமென்பதனை மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட பிறகுதான் - அப்படிப் பகிர வேண்டிய அதிகாரம் எது, எந்த அளவுக்கு என்ற விவாதத்தில் ஈடுபட்டுக் கருத்துக்களைச் சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், மத்திய அரசு இதுவரை மாநில சுயாட்சிக் கொள்கை அளவிலேகூட ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தியாவின் பிரதமர், 'சுயாட்சி' என்ற சொல்லே அபாயகரமானது என்று பிரச்சாரம் செய்து வருகிறார். இவையெல்லாம் பிரிவினைச் சக்திகளிடமிருந்து வருகின்ற கருத்துக்கள், குழப்பங்கள் என்றுகூடப் பெயர் வைத்துவிட்டார். இதற்குப் பிறகு, அரசியல் சட்டத்தை விதிவிதியாக எடுத்துக்கொண்டு திருத்தங்கள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டிய 'விதி' நமக்கு இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. ஆனால், ஒன்று ஆட்சிக்கு வெளியே உள்ள என்