பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 ம.பொ.சிவஞானம் நாடுகளும் உண்டு. இந்தியாவின் நாசத்தை விரும்பும் நாடுகளும் உண்டு. அந்த நாடுகளின் செவிக்குப் போகிற அளவில், பிரதம மந்திரி பதவியில் இருக்கும் ஒருவரிலிருந்து- ஆளும் கட்சியில் இருக்கிற மற்ற பெரியவர்கள் வரையில்-எல்லோரும் சேர்ந்து கொண்டு, "இங்கே பிரிவினை கேட்கும் ஒரு கட்சி ஆட்சி நடத்துகிறது' என்ற செய்தியை உலகுக்குக் கொடுப்பது எந்த நன்மையை எதிர்பார்த்து என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதில் அரசியலும் இல்லை; ராசதந்திரமும் இல்லை; தற்காப்பும் இல்லை. சுத்தமாகச் சொல்லப்போனால். தேசபக்திகூட இல்லை. இரண்டு பொதுத் தேர்தல்களிலே வெற்றி பெற்றுள்ள - இளம் சிங்கங்களை லட்சக் கணக்கில் பெற்றுள்ள- ஆட்சியைப் பிடித்துக் கொண்டுள்ள ஒரு கட்சி நாட்டைத் துண்டாடக் கேட்கிறதென்று உலகத்தின் முன்னிலையில் விளம்பரப்படுத்துவது. இந்தியாவைப் பற்றி பிற நாடுகள் என்ன எண்ணவைக்கும்? அதிலும் முப்புறமும் கடல் பகுதியைக் கொண்ட-டாக்காவை நெருங்கிய அமெரிக்கா 7ஆவது அணி கடற்படையை மறக்க வேண்டாம்- ஒரு மாநிலத்தில் பிரிவினைக் கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி ஆட்சி செய்கிறதென்று உலகத்திற்கு அறிமுகப்படுத்துவது தேச பக்திதானா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று என்னுடைய முன்னாள் நண்பர்களான-இந்த நாளிலும் தனிப்பட்ட நண்பர்களான -தேச பக்தர்களை நான் வேண்டுகின்றேன் இன்னொன்றையும் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். *பிரிவினை கேட்கிறார்கள்' என்கிறீர்களே, அது உண்மைதானா? உங்களுடைய பலவீனத்தின் விளைவாக அதைச் சொல்கிறீர்களே ஒழிய, சுயாட்சித் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாத உங்கள் பரிதாபச் சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் சொல்லுகிற ராச தந்திர வாசகம்தானே ஒழிய உங்கள் மனம் அதை நம்பவில்லை. அது எனக்குத் தெரியும்.