பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 13 முதல்வர் அவர்கள் தம்முடைய தீர்மானத்திலும் சரி, முன்னுரையிலும் சரி; ஐயத்திற்கு இடமின்றி, "நாங்கள் பிரிவினையைக் கோரவில்லை யென்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இங்கு பேசிய காங்கிரஸ்காரர்களில் சிலர் சொன்னார்கள். "நீங்கள் இப்படியே நாட்டைப் பிரிவினைக்குக் கொண்டுபோய் விடுவீர்கள்; ஒரு நாளைக்கு பிரிவினையே கேட்டு விடுவீர்கள் என்று. இது அப்பட்டமான பலவீனம். இந்த நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரசும் மட்டுமே இல்லை. அவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சிகளும் இருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அப்பால் கோடிக் கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஆகவே. உண்மையில் பிரிவினையை விரும்பாத - அதை எதிர்க்கின்ற தேச பக்தர்களிடம் ஒன்றைக் கேட்கிறேன்; ஏன் மக்களிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லை? மக்கள் இந்தப் பிரிவினையை ஏற்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உள்நோக்கத்தை நீங்கள் ஆராய வேண்டிய அவசியமில்லை. அதைப் பற்றிய ஐயத்தைத் தூக்கி எறியுங்கள். பிரிவினைக்கு எதிராக மக்களை அழைத்துச் செல்லும் பிரச்சார இயந்திரம் வலுவாக இருக்கிறது உங்களிடம் என்று நீங்கள் எண்ணினால், திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. மக்கள் பிரிவினை கேட்கக் கூடிய அளவுக்கு, அவர்கள் கோபப்படக் கூடிய அளவுக்கு உங்கள் மத்திய ஆட்சி நடந்து கொள்ளாதென்ற ஜனநாயகத் தன்மையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால். திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினை கேட்டுவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை. ஒருகால். திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக்குப் போய் விட்டால், அதைத் தடுக்கும் சக்தி உங்களுக்கில்லை என்றால். அப்போது ஆண்டவன்தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். வேறு நான் என்ன சொல்ல முடியும்?