பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 ம.பொ.சிவஞானம் இனி, பிரிவினைபற்றி என்னுடைய கருத்துக்களைச் சொல்லுகிறேன். தமிழ்நாடு ஒருநாளும் பிரிவினையைக் கோராது. கடைசிவரை சுயாட்சி கோரிப் போராடுமே தவிர. மைய ஏகாதிபத்தியத்திற்கும் அடி பணியாது; பிரிந்து வாழ்கின்ற நிலையையும் அது கோராது. இந்த உறுதி எனக்கு இருப்பதால், 'நாங்கள் பிரிவினை கோரவில்லை' என்று முதல்வரவர்கள் சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன். 'பிரிவினை, பிரிவினை' என்கிறீர்களே, அதற்குச் சான்று உங்களிலே ஒருவரும் சொல்லவில்லை. பேரவையில் நான்கு நாட்கள் நடந்த விவாதங்களை நேராகக் கேட்டேன். இங்கும் மூன்று நாட்கள் கேட்டிருக்கிறேன். மாநிலங்களுக்குச் சுயாட்சி கொடுத்து விடுவது பிரிவினைக்கு வித்து என்றால், அதற்கு ஒரு சான்றாவது நீங்கள் சொல்ல வேண்டுமே! உலகில் சமஷ்டி நாடுகள் பல இருக்கின்றன, அமெரிக்கா, சோவியத் யூனியன், கனடா, ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து. மலேசியா ஆகியவெல்லாம் சமஷ்டி நாடுகளே! மாநிலங்களுக்குச் சுயாட்சி வழங்கியுள்ள நாடுகளே! அப்படிச் சுயாட்சி வழங்கப்பட்ட நாடுகளிலே, ஏதேனும் ஒரு மாநிலம் பிரிந்து போய் விட்டதென்றோ, மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கிவிட்டதால் நாட்டின் கட்டுக்கோப்புக் குலைந்து போய்விட்டதென்றோ. தேசிய ஒருமைப்பாடு அழிந்து, பகை நாட்டின் படை புகுந்து விட்டதென்றோ ஒரு சான்று சொல்ல முடியுமா? உலக சரித்திரத்தில் ஒரு சான்றினை பிரதமரவர்களோ அல்லது இந்த அவையின் உறுப்பினர்களோ எடுத்துச் சொன்னதுண்டா? இதற்கு நேர்மாறாக, பிரிவினையைத் தடுப்பதற்கு சுயாட்சி பயன்பட்டிருக்கிறது. மாநில சுயாட்சியை பிரிவினைக்கு மாற்றாகப் பெறுகி றோம். அது பிரிவினை அல்ல. பிரிவினை என்ற நோய்க்கு அது மருந்து