பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 15 உலகில் மாநில சுயாட்சியை ஒப்புக்கொண்ட எந்த ஒரு சமஷ்டியும் கலைந்து போகவில்லை. மாநில சுயாட்சியை ஒப்புக் கொள்ள மறுத்த எந்த ஒரு நாடும் தன்னுடைய ஏகத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டதில்லை. அமெரிக்காவில்தான் முன்னதாக சுயாட்சி மாகாணங்கள் கொண்ட சமஷ்டி அமைந்தது. 1781ல் அங்கு சமஷ்டிச் சட்டம் அமுலுக்கு வந்தது. அப்போது 13 ராஜ்யங்கள்தான் சமஷ்டியில் இருந்தன. இன்றைக்கு 52 ராஜ்யங்கள் இருக்கின்றன. 1781ல் சமஷ்டியில் சேர்ந்த ராஜ்யங்களில் ஒன்று கூட பிரியவில்லை. சேராத புதிய ராஜ்யங்கள் பின்னால் சமஷ்டியில் சேர்ந்து கொண்டன. இது மிகப் பெரிய ஒரு நாட்டின் அனுபவம். சோவியத் நாட்டில், மாநிலங்களுக்கு சுயாட்சி மட்டும் அல்ல: 'ரைட் ஆப் செஸிஷன்' என்ற பிரிந்து போகின்ற உரிமையும் உண்டு. இருந்தும் எந்த ஒரு மாநிலமும் இதுவரை பிரிந்து போகவில்லை. புதிதாக சில நாடுகள் சேர்ந்திருக்கின்றன. மலேசியாவில், விரும்பினால் பிரிந்து போகிற உரிமை யோடு. மத்தியில் கூட்டாட்சியும் மாநிலங்களில் சுயாட்சியும் இருக்கின்றன. எந்த ஒரு மாநிலமும் அங்கே பிரிந்து போக வில்லை. உலகத்தில் எங்கும் இல்லாத- உவமை காட்ட முடியாத ஒரு இழிவைத் தமிழன் தலையில்தானா சுமத்த வேண்டும்?- என்று அவர்களுடைய தேசபக்தியின்மீது ஆணையிட்டு காங்கிரஸ் நண்பர்களைக் கேட்கிறேன். "பிரிவினை பற்றிய அச்சம் இருக்கிறது என்று நம்முடைய தீட்சிதர் அவர்கள் சொன்னார்கள். அவர்கள் "நாங்கள் ஏகாதி பத்தியத்தையே எதிர்த்தவர்கள். உங்களுக்கா பயப்படுவோம்?" என்றும் சொன்னார்கள். இப்போது காங்கிரசில் புதிதாகப் புகுந்தவர்கள் எல்லாம் இப்படித்தான் பேசுகிறார்கள். பழைய காங்கிரஸ்காரரான இராசாராம் நாயுடு அவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள்; நானும் அப்படிச் சொல்லமாட்டேன்.