பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 17 கல்வித்துறையைப் பொறுத்த மட்டில், அது மாநில சப்ஜெக்ட். அப்படிப்பட்ட கல்வித் துறையில்கூட மத்திய ஆட்சி இப்போது என்ன செய்கிறது? சில பல்கலைக் கழகங்களை அது எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆந்திரா பல்கலைக் கழகத்தையும் திருப்பதி பல்கலைக் கழகத்தையும் ஆந்திர சர்க்கார் நடத்துகிறது. அங்குள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தையும் அதனிடம் கொடுத்தால், அது நடத்த முடியாதது அல்ல, தனியார் கூடப் பல்கலைக் கழகங்கள் நடத்தும்போது ஆந்திர மாகாண அரசு உஸ்மானியா பல்கலைக்கழகத்தை நடத்த முடியாதா? ஆக்ரா பல்கலைக் கழகம் மத்திய அரசிடம் இருக்கிறது? டெல்லி பல்கலைக் கழகமும் அதனிடமே இருக்கிறது. ஆகவே. அவற்றிற்காக ஒரு கல்வி இலாகாவை டெல்லியில் வைத்துக் கொண்டிருப்பது சரிதானா? டெல்லியில் ஒரு கல்வி மந்திராலயத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில பல்கலைக் கழகங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டுமா? அமெரிக்காவில் தொழில் நுணுக்கக் கல்லூரிகளை. என்ஜினீயரிங் கல்லூரிகளை அந்த நாட்டின் தொழில் அதிபர்களே நடத்துகின்றனர். தொழில் நிறுவனங்களே நடத்துகின்றன. அப்படியானால், இங்கே மத்திய அரசிடமுள்ள தொழில் நுட்பக் கல்லூரிகளை மாநில அரசுகள் நடத்த முடியாதா? ஆரம்பக்கல்வி. உயர்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி இவைகளை எல்லாம் வைத்துக் கொண்டிருக்கிற மாநிலத்தில். ஒரே ஒரு கல்விமந்திரிதான் இருக்கிறார். ஆனால் மத்தியிலோ, ஒரு கல்வி மந்திரி: ஒரு ஸ்டேட் மந்திரி; ஒரு டெபுடி மந்திரி! இத்தனை பேர் அங்கு தேவைதானா? நான் இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பவர்களை ஒன்று கேட்கிறேன்; டில்லியிலுள்ள கல்வி இலாகாவை அரசியல் சட்டத்தைத் திருத்தாமல் இழுத்து மூட முடியும் என்று சட்ட-2