பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 19 வகுத்தார்கள். இவ்வளவு காலத்திற்குப் பிறகு நாம் கான்பெட ரேஷனுக்குப் போகமுடியாது. பண்டித ஜவகர்லால் நேரு - விடுதலைப் போரின் போது- காஷ்மீருக்குப் போனார். அங்கே சுயாட்சிப் பிரச்சினை வந்த போது. 'இந்திய கான்பெடரேஷன்தான் நம்முடைய இறுதி நோக்கம்' என்று சொல்லியிருக்கின்றார். அது கிடக்கட்டும். இந்த ஆட்சி கேட்பது முழு பெடரேஷன் கூட அல்ல; அதற்கும் கீழே இறங்குகிறது என்பதுதான் முக்கியம். ருஷ்யாவிலே, 'ரைட் ஆப் செசிஷன்' பிரிந்து போகிற உரிமையோடு மாகாணங்கள் கூட்டாட்சியில் இருக்கின்றன. அந்த உரிமையை வெள்ளை அறிக்கையோ, தீர்மானமோ வற்புறுத்த வில்லை. இரண்டு நாளைக்கு முன்பு இங்கு நண்பர் முத்துசாமி பேசும்போது, அவரை இடைமறித்து, "பிரிந்து போகிற எண்ணம் எங்களுக்கு இல்லை" என்று முதல்வர் அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள். ஆம்; சோவியத் நிலைக்கும் கீழே இறங்குகிறது வெள்ளை அறிக்கை. சுயாட்சி பெற்ற மாநிலங்கள், சர்வதேச மன்றத்தில் அதாவது. ஐ.நா. மன்றத்தில் அங்கம் வகிக்கலாம். சோவியத் யூனியன் மாநிலங்களான உக்ரேன். பைலோருஷியா இரண்டும் ஐ.நா. மன்றத்தில் அங்கம் வகிக்க உரிமை பெற்று விட்டன. நம் இந்தியாவில் ஏதேனும் ஒரு மாகாணம் அந்த உரிமையைக் கேட்கத் தகுதியுடையது என்றால். அது தமிழ் நாடு ஒன்றுதான். பர்மா, சிலோன், சிங்கப்பூர், மலேசியா போன்ற அயல் நாடுகளில் நம்முடைய மக்கள் - இந்தியர்கள் என்ற பெயரில் தமிழர்கள் - வாழ்கின்றார்கள். இலங்கையில் தமிழர் - சிங்களர் பிரச்சினை, பர்மாவில் தமிழர் விட்டுவந்த சொத்துக்கு நஷ்டஈடு கொடுக்க மறுக்கும் பிரச்சனை இவைகளை ஐ.நா. மன்றத்தில்