பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 ம.பொ.சிவஞானம் எடுத்துச்சொல்லி தமிழ் இனத்தைப் பாதுகாத்துக் கொள்ள அதிலே நமக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்று நாம் கேட்டால், அது பாவம் அல்ல சோவியத் யூனியனைச் சான்று காட்டலாம் முதலமைச்சர். ஆனால், வெள்ளை அறிக்கையில் தமிழக அரசு அதைக் கேட்க வில்லை. போன்ற அமெரிக்கா, சோவியத் யூனியன் பெடரேஷன்களில் ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் தனித்தனி கான்ஸ்டிடியூஷன் உண்டு, அங்கெல்லாம் பெடரல் கான்ஸ்டி டியூஷன் வேறு. ஸ்டேட் கான்ஸ்டிடியூஷன் வேறு. இங்கு. யூனியனுக்கும் மாநிலத்திற்குமாக ஒரே கான்ஸ்டிடியூஷனைத்தான் வைத்திருக்கிறோம். அந்த சமஷ்டிகளிலே ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் சுய நிர்ணயமும் உண்டு. ஆம்; சுயாட்சி மட்டும் அல்ல: அந்த சுயாட்சியை நடத்துவதற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரைட் ஆப் செல்ஃப் டிட்டாமினேஷன் - சுயநிர்ணம் - கொடுக்கப்பட்டிருக் கிறது. ஆனால், இங்கே உள்ளது ஒரே கான்ஸ்டிடியூஷன்தான். இதை மாற்றி ஸ்டேட் கான்ஸ்டிடியூஷன் தனித் தனியாகத் தயாரித்துக்கொள்ள சுயநிர்ணய உரிமை வேண்டும். இந்த வெள்ளை அறிக்கை அதைக் கேட்க வில்லை. அந்த நிலைக்கும் கீழே இறங்கியிருக்கிறது. அமெரிக்காவிலும் சோவியத் யூனியனிலும் நேஷனல் ஃபிளாக் வேறு: ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஸ்டேட் ஃபிளாக் வேறு. அதிகார அந்தஸ்துடையது ஸ்டேட் ஃபிளாக். ஆனால், மந்திரிகள் காருக்கே கொடி கொடுக்க மறுத்த அரசிடம் போய் 'ஸ்டேட் ஃபிளாக் கொடு' என்று கேட்டு அசிங்கப்படுத்திக் கொள்ள வேண்டாம். என்று முதல்வர் அவர்கள் எண்ணினார் களோ என்னவோ, கேட்கவில்லை. அமெரிக்காவிலும் சோவியத் யூனியனிலும் நேஷனல் சாங் வேறு: ஸ்டேட் சாங் வேறு. நேஷனல் 'சாங்'க்குக்கு விரோதம்