பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 21 இல்லாமல் ஸ்டேட் சாங். இந்த வெள்ளை அறிக்கை அப்படி எல்லாம் ஒன்றும் கேட்டுவிடவில்லை. மொத்தத்தில் சொன்னால், 'டீசென்ரலைசேஷன்' என்ற அளவிற்குத்தான் தமிழக அரசு கோருகிறது. குறைந்த பட்ச சுயாட்சியோடு ஆறுதல் அடைகிறது. 'சுயாட்சி' என்ற வாசகத்தைக் கேட்டு காங்கிரஸ் காரர்களாகிய நீங்கள் பயப்படுகின்றீர்களா? அல்லது எங்களைப் பயமுறுத்துகின்றீர்களா? அல்லது ஊரைப் பயமுறுத்து கின்றீர்களா? இந்தப் பயமுறுத்தல் வெகு நாட்களுக்கு நீடிக்காது. 'சுயாட்சி' என்ற சொல்லுக்கு உங்களுடைய அரசியல் ஞானத்தையே நீங்கள் அவமானப்படுத்திக் கொள்ளும் வகையில் தவறான வியாக்கியானம் சொல்லக்கூடாது. ஒன்று, நாங்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை' என்று சொல்லுங்கள்: 'அதை நாங்கள் எதிர்க்கிறோம்' என்று தைரியமாகச் சொல்லுங்கள். ஆனால், இது பிரிவினைக்கு வழிகாட்டுவது; சுயாட்சி அளித்து விட்டால் நாடு என்னமோ ஆகிவிடும்' - என்றெல்லாம் தவறாகச் சொல்லவேண்டாம். திரு.ஜி. சுவாமிநாதன் சொன்னார். லோகல் போர்டு அடானமஸ் பற்றி. லார்டு ரிப்பன் கொடுத்த சீர்திருத்தத்திற்கு 'ஸ்தல சுயாட்சி' என்றுதான் பெயர். இன்னும் சொல்லப்போனால் யூனிவர்ஸிடியையே 'சுயாட்சி' அந்தஸ்து பெற்றது என்று சொல்லுவது வழக்கம். அப்படிப்பட்ட 'சுயாட்சி'யைக் கண்டு காங்கிரஸ் ஏன் இவ்வளவு பயப்பட வேண்டும்? எனக்குப் புரியவில்லை. சுயாட்சி என்ற வார்த்தையை வழக்கத்திற்குக் கொண்டு வந்ததே காங்கிரஸ்தான். டாக்டர் பட்டாபி சீதாராமையா அவர்கள் எழுதிய காங்கிரஸ் வரலாற்றை எடுத்துப் படித்துப் பாருங்கள். அவர் சொல்லுகிறார். 'மாநிலங்களுக்குப் பரிபூரண சுயாட்சி வழங்க வேண்டும் என்ற அடிப்படையை வைத்துத்தான் காங்கிரஸ்