பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 ம.பொ. சிவஞானம் மகாசபை காங்கிரஸ் மாநிலங்களை மொழிவாரியாகப் பிரித்தது" என்று காங்கிரசின் சரித்திரத்தில் கோளாறு இல்லை. நானும் சேர்ந்து வரைந்ததுதானே அந்தச் சரித்திரம்? நாங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிர்த்துப் போரிட்டவர்கள்' என்று சொன்ன தீட்சிதர் அவர்களுக்குச் சொல்லுகிறேன்; திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கூட்டு சேர்ந்துவிட்டதால் சிவஞானத்தின் தேசபக்திக்குத் தீட்டுப் பட்டு விடவில்லை. தீட்டுப்படவும் செய்யாது. இந்த அவையில் அரசியல் சட்டத்தின் பெயரால் நான் விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டது வெறும் சடங்கல்ல. அதை ஒரு சன்மார்க்க நெறியாகவே நான் எண்ணுகிறேன். அரசியல் சட்டத்தை நான் என்றுமே மதிக்கிறவன். ஏன் என்றால், இந்த அரசியல் சட்டம் சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் சட்டம். அது. தேச விடுதலை வீரர்களின் இரத்தத்தால் எழுதப் பட்டது. அதை எழுதுவதற்கு இரத்ததானம் செய்தவர்களிலே நானும் ஒருவன். 'மாநில சுயாட்சியைத் தமிழ் நாடு மட்டும் ஏன் கேட்கிறது? என்கிறார்கள். இது கொஞ்சம் பசையுள்ள வாதம்தான். இந்தியாவிலுள்ள அவ்வளவு மாநிலங்களும் கேட்காதபோது. தமிழ்நாடு மட்டும் கேட்பானேன்?' என்று கேட்கிறார்கள்.நானும் திருப்பிக் கேட்கிறேன் அவர்களை. 'இந்தியா முழுவதும் பிரிக்கமுடியாத ஒரே நாடு என்று நீங்கள் வாதிடும்போது. மாநிலத்திற்கு மாநிலம் வேற்றுமை ஏன்? காஷ்மீரத்திற்கு மட்டும் தனி அரசியல் சட்டத்தைத் தயாரித்துக் கொள்ள அனுமதி தந்தது ஏன்? இந்திய அரசியல் சட்டத்தை எடுத்துப் பாருங்கள்; ஒவ்வொரு விதிக்கும் அடியிலே, 'நோட்' போடுவதைப்போல. எவ்வளவு விதிகளை - ஒன்று இரண்டு இல்லை, எண்ணற்ற இடங்களிலே - இது காஷ்மீரத்திற்கு விலக்கு' 'காஷ்மீரத்திற்கு இது பொருந்தாது'. 'காஷ்மீரத்தைப் பொருத்த வரையில் இந்தத்